ஆரோக்யம்

ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் இத மட்டும் செய்யவே கூடாது!

தண்ணீர் :

பொதுவாக இது போன்று பாதிக்கப்பட்டு அடிக்கடி வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு செல்வதால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறைந்திடும். இதனை ஈடுகட்ட வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

இது உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் டாக்சின்களை வெளியேற்ற உதவிடும் என்பதால் நோயின் தீவிரம் குறையும். இது போன்ற நேரங்கள் திட உணவுகளை தவிர்த்து விட்டு திரவ உணவுகளை குடிக்க வேண்டும். அது தவிர இதனைப் போக்க வீட்டிலேயே என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி :

இஞ்சி :

வீட்டிலிருக்கக்கூடிய மிகச்சிறந்த மருந்து இது. செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்தாக இது இருக்கிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி சார்ந்த பிரச்சனை ஏற்பட்டாலும் இஞ்சி சாறு எடுத்து குடிக்கலாம். இதில் அதிகளவு இனிப்பு சேர்க்காதீர்கள் தேவையென்றால் ஒரு ஸ்பூன் தேன் மட்டும் கலந்து கொள்ளலாம்.

இப்படியில்லையென்றால் இஞ்சியை தோல் நீக்கி அப்படியே கடித்து சாப்பிடலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

இதில் ஆல்கலைன் இருக்கிறது. இதனை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கக்கூடிய பாக்டீரியா நீக்க இது பெரிதும் உதவுகிறது. உணவு சாப்பிடுவதற்கு முன்னதாக ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்து விடவும். இது குடித்த அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிடலாம்.

வெந்தயம் :

வெந்தயம் :

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம். இல்லையென்றால் வெந்தயத்துடன் தயிர் கலந்து அப்படியே சாப்பிடலாம். தயிரில் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோதுகள்கள் நிறையவே இருக்கிறது.

இது உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிற பாக்டீரியாவினை எதிர்த்து போரிடும். இவற்றுடன் வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று வலி உங்களுக்கு உடனே குறையும். வெந்தயத்தை கடித்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை தயிருடன் சேர்த்து அப்படியே விழுங்கி விடலாம்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

அமிலம் நிறைந்த இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இதிலிருக்கும் அமிலம் வயிற்றிலிருக்கக்கூடிய பாக்டீரியாவை அழித்திடும். எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை கலந்து குடிக்கலாம். இதில் இனிப்பு எதுவும் சேர்க்க வேண்டாம். இது செரிமானத்திற்கு உதவுவதுடன் க்ளீன் செய்யவும் உதவிடும்.

பூண்டு :

பூண்டு :

வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட இது பெரிதும் உதவிடும். வெள்ளைப் பூண்டினை அப்படியே எடுத்து சாப்பிடலாம். பூண்ட்டின் வாசனை பிடிக்கவில்லை என்றால் பூண்டினை அரைத்து சாறு எடுத்து சாப்பிடலாம்.

பூண்டினை சுட்டு சாப்பிட்டால் அதன் வாசம் அவ்வளவாக தெரியாது.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

இது போன்ற நேரங்களில் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிகமான, செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுக்கிற மாதிரியான உணவுகளை எல்லாம் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.

வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் அதிகப்படியான பொட்டசியம் இருக்கிறது. இதனை எடுத்துக் கொள்வதால் வயிறு நிறைவதுடன் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும். அதைத் தவிர இது உங்களுக்கு எனர்ஜியையும் கொடுத்திடும்.

சீரகம் :

சீரகம் :

வயிற்றில் ஏற்படுகிற தொல்லைகளுக்கு சீரகம் மருந்தாக பயன்படும், சாதரணமாகவே சீரகம் கலந்த தண்ணீரை குடித்தால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாதவறு தவிர்க்கலாம்.

உணவு ஒவ்வாமை ஏற்பட்டால், ஒரு கப் சூடான தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்திடுங்கள். அதன் பின்னர் அதிலேயே மல்லிச் சாறு சேர்க்கவேண்டும். சாறு இல்லையென்றால் மல்லி இலைகளை அப்படியே சேர்க்கலாம். பின் சூடு ஆறியதும் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

இல்லையென்றால் சீரகத்தண்ணீரில் உப்பு மற்றும் பெருங்காயம் கால் பின்ச் அளவு சேர்த்து குடிக்கலாம்.

பால் :

பால் :

இது போன்ற நேரங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. டீ , காபி போன்ற பானங்களை தவிர்த்திடுங்கள் க்ரீன் டீ, ஹெர்பல் டீ போன்றவை குடிக்கலாம்.

வியர்வை அதிகமாக வெளியேறக்கூடிய மாதிரியான வேலைகளை தவிர்த்திடுங்கள்.

தேன் :

தேன் :

எல்லார் வீட்டிலும் இருக்க வேண்டிய அருமருந்து. குறிப்பாக செரிமானப் பிரச்சனைகளுக்கு இது முக்கிய தீர்வாக அமைந்திடும். சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

வயிற்றுப் போக்கு இருப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ் என்று சொல்லவேண்டும். அதோடு இதனை சாப்பிடுவதால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் சேர்வது தவிர்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி