ஆரோக்யம்

அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா? அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

காரணங்கள் :

மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக இருப்பது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உடலால் தாங்கிக் கொள்ள முடியாத டெம்பரேச்சரில் இருப்பது, உயரமான இடங்களுக்கு பயணிப்பது, உடற்பருமன் ஆகியவை தான். இவற்றைத் தவிர மருத்துவ காரணங்களும் இருக்கிறது. உடலில் ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

மூச்சுத் திணறலுக்கு முதன்மையான காரணமாக ஆஸ்துமா இருக்கிறது. மூச்சுக்காற்று சென்று வரும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். இவை நுரையிரலுக்கு போதுமான காற்றை கொண்டு செல்லாததால் தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை தொடர்ந்து இருமல், இளைப்பு, நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு மேலோங்கும்.

நிமோனியா :

நிமோனியா :

இதுவும் நுரையிரலில் ஏற்படுகிற ஓர் பாதிப்பு தான். வைரஸ் பாக்டீரியா அல்லது பூஞ்சான் தொற்றினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை தான் அறிகுறிகள். எக்ஸ்ரே மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.

நிமோதெராக்ஸ் :

நிமோதெராக்ஸ் :

நுரையிரலுக்கும் மார்புகூட்டிற்கும் இடையில் அளவுக்கு அதிகமான காற்று சேர்ந்திருப்பதைத் தான் நிமோதெராக்ஸ் என்கிறார்கள். அதிகமாக புகை பிடிப்பவர்கள், chronic obstructive pulmonary disease என்ற பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோதெராக்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இவர்களுக்கு மூச்சுத்திணறல் மட்டுமல்லது நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு, அதீத வியர்வை ஆகியவை ஏற்படும். சிடி ஸ்கேன் மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம். இந்த பாதிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆழ்கடலில் நீச்சலடிப்பது, விமான பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

பல்ம்னோரி எம்போலிசம் :

பல்ம்னோரி எம்போலிசம் :

நுரையிரலில் ரத்த உறைவு ஏற்பட்டாலும் மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த பாதிப்பினைத்தான் பல்ம்னோரி எம்போலிசம் என்று அழைக்கப்படுகிறது. ரத்த உறைவு ஏற்படுவதினால் நுரையிரலில் இருக்கிற திசுக்கள் பாதிப்படைகின்றன. இவர்களுக்கு மூச்சுத் திணறல் மட்டுமல்லாது, நெஞ்சு வலி, அதீத சோர்வு, இருமும் போது ரத்தம் வருவது ஆகிய அறிகுறிகள் தென்படும்.

பல்ம்னோரி ஆன்ஜியோகிராபி மற்றும் ஸ்கேன் மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.

நுரையிரல் புற்றுநோய் :

நுரையிரல் புற்றுநோய் :

நுரையிரலில் அபரீதமான செல்வளர்ச்சி புற்றுநோயை உண்டாக்கிடும். அமெரிக்காவில் அதிகளவு நுரையிரல் புற்றுநோயினால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஓர் கருத்துக்கணிப்பு. நுரையிரல் புற்றுநோய் ஏற்பட மிக முக்கியமான காரணம் புகைப்பழக்கம்.

நுரையிரல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் மூச்சிறைப்பு ஏற்படும். இதைத் தவிர, தொடர் இருமல், எலும்பு வலி, எடை குறைவது ஆகியவை ஏற்படும். சிடி ஸ்கேன், நுரையிரலில் இருக்கிற திசுக்களை ப்ரோன்கோஸ்கோபி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம்.

இதயம் செயலிழப்பு :

இதயம் செயலிழப்பு :

உடலுக்கு தேவையான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்ய முடியவில்லை என்றால் அதைத் தான் இதயம் செயலிழந்துவிட்டது என்கிறார்கள். இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லக்கூடிய வால்வுகளில் அடைப்பு இருப்பது, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை இதற்கு காரணமாய் இருக்கிறது.

இதயம் செயலிழப்பிற்கு முதன்மையான அறிகுறிகள் இருமல், உடல் எடை திடீரென்று அதிகரிப்பது, நெஞ்சு வலி, இதயத்துடிப்பு அபரிதமாக இருப்பது ஆகியவை முதன்மையான அறிகுறிகளாக இருக்கிறது.

அனக்சிட்டி டிஸ்ஸார்டர் :

அனக்சிட்டி டிஸ்ஸார்டர் :

அதீத மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணி. இதன் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோய் முற்றி தீவிரமடையும் போது தான் நமக்கே தெரியவரும்.

இந்தப் பிரச்சனை மரபு ரீதியாகவும் ஏற்படக்கூடும். இவர்களுக்கு மூச்சுத் திணறல் உட்பட, தூங்குவதில் சிரமங்கள், வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கும்.

இதனை டிஎஸ்எம்-5 என்கிற டெஸ்ட் மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.

அனீமியா :

அனீமியா :

ரத்தத்தில் போதுமான உயிரணுக்கள் இல்லாதவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படும். இது தாக்கம் சிலருக்கும் மைல்டாகவும் சிலருக்கு அதீதமாகவும் இருக்கக்கூடும். இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இரும்புச் சத்து குறைபாடு தான்.

இவர்களுக்கு மூச்சுத் திணறல் உட்பட, சோர்வு, சருமத்தில் மாற்றங்கள், முடி உதிர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறன. ரத்தப்பரிசோதனை மூலமாக இதனை கண்டுபிடிக்கலாம்.

சத்துக்குறைபாடு, அதிகமான உதிரப் போக்கு ,மரபணு,மற்றும் கிட்னி கோளாறுகள் ஆகியவற்றாலும் ரத்த சோகை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

டிபி :

டிபி :

டிபி முக்கியமாக உங்களுடைய நுரையிரலை தான் பாதிக்கும். மைக்ரோ பாக்டீரியாவான டியூபர்க்ளோசிஸ் தான் இதற்கு காரணம். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் இருமல், தும்மல் வழியாக இது பரவிடும்.

இந்த வைரஸ் நுரையிரலை மட்டுமல்லாது மூளை, கிட்னி காய்ச்சல், இரவில் வியர்ப்பது, எடை குறைவு, ஆகியவை அறிகுறிகளாக இருக்கிறது.

க்ரோனிக் ஆப்ஸ்ட்ரக்டிவ் பல்ம்னோரி :

க்ரோனிக் ஆப்ஸ்ட்ரக்டிவ் பல்ம்னோரி :

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் நுரையிலிருந்து காற்று வெளிவருவதில் சிக்கல்கள் ஏற்படும். காற்று வெளிவரும் நேரும், காற்றை உள்ளிழுக்கும் நேரமும் மாறுவதால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நெஞ்சடைப்பு, இருமல், எடைகுறைப்பு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.

எக்ஸ்ரே மற்றும் ரத்தத்தில் இருக்கிற கேஸ் அளவுகளின் மூலமாக இந்த நோயின் பாதிப்பை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இதற்கென்று நிரந்தர தீர்வுகள் எதுவும் இல்லை மருந்துகளின் மூலமாக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி