சினிமா

அடுத்த மாதம் தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி

ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, விறுவிறுப்பாக பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கை குழுவினருக்கு இப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post அடுத்த மாதம் தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி