கிசு கிசு

"அடுத்த ரஜினி"… தனுஷ் பேச்சுக்கு பதிலடி… எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு!

தனுஷை வெளுத்து கட்டி வீடியோ வெளியிட்ட சிம்பு

சென்னை: தனுஷின் ‘அடுத்த ரஜினி’ குறித்த பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக எமோசனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

ரஜினியின் ‘காலா’ படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ், ‘சினிமாவில் நுழையும் பெரும்பாலான நடிகர்களுக்கு, அடுத்த ரஜினியாகிவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை இருக்கிறது. ஆனால், அடுத்த ரஜினியாவதற்கு இங்கு ஃபார்முலா எதுவுமே இல்லை. காரணம், எப்போதுமே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மட்டும்தான்’ எனத் தெரிவித்திருந்தார்.

Actor Simbus emotional video

இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் விதமாக நடிகர் சிம்பு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் உட்பட பல்வேறு விசயங்களைப் பேசியுள்ள சிம்பு, கூடவே அடுத்த ரஜினி பிரச்சினை பற்றியும் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அந்த வீடியோவில் அவர், “நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்னால் ரோபோ போல் வேலை செய்ய இயலாது. என் மீது தப்பு என்றால் மன்னிப்பு கேட்பேன். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். இதன் பிறகு நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என எனக்குத் தெரியாது” என அந்த வீடியோவில் சிம்பு பேசியுள்ளார்.

ஏன் சிம்பு இவ்வளவு விரக்தியாகப் பேசியுள்ளார் என அவரது ரசிகர்கள் குழப்பமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி