சினிமா

அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர்

அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் உபன் படேல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.< /div> இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகையில், ”இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவான மற்றும் சவாலான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உபன் படேலை அணுகி அவரிடம் இப்படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் சொன்னேன். கதையை கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் அவரை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த கதை தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் மிகவும் பொருத்தம் என உறுதியாக நம்புகிறேன். இந்த படம்

The post அதர்வாவுடன் மோதும் பாலிவுட் நடிகர் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி