இந்தியா

அமைச்சர்கள்தான் உயிரிழப்புக்குக் காரணம் ! தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி !

‘அமைச்சர்களின் அலட்சியம்தான், குரங்கணி தீ விபத்து உயிர் இழப்பிற்குக் காரணம்’ என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

 


மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன், வரும் 15-ம் தேதி காலை சுமார் 10 மணிக்கு, தனது புதிய கட்சியையும் கொடியையும் அறிவிக்க உள்ளார். அதற்கான வேலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேலூர் எஸ்.பி.ஆர் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றன. இவற்றை, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பார்வையிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று,  தங்க தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.  அப்போது  செய்தியாளர்களிடம் பேசினார். ‘தேனி குரங்கணி தீ விபத்தின்போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஏற்பாடுசெய்திருந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், அங்கிருந்து விரைவாகச் சென்றிருந்தால், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவர்கள் சற்று அலட்சியம் காட்டியே சென்றுள்ளனர். 

மேலூரில், தினகரனின் புதிய கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்யும் விழா  நடைபெற உள்ளது. அ.தி.மு.க-வையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம், நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தின்மூலம், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் நிகழக்கூடும். எங்கள் அணிக்கு இருக்கும் பலம் மற்றும் மக்களின் ஆதரவால், எதிரணியில் உள்ள ஜெயக்குமார் போன்றோர் பயத்தால் எதையாவது பேசி உலப்பிவருகின்றனர்’ என்றார் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி