இந்தியா

அ.தி.மு.க.விலிருந்து பேராசிரியர் தீரன் நீக்கம்!

Chennai: 

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் தீரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 


அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிப்பதற்காக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டனர். ’பொன்னையன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிச்சாமி, ஏ.எஸ். மகேஸ்வரி மற்றும் பாபு முருகவேல்’ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், மேற்கூறிய 12 பேர் தவிர, அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச வேறு யாருக்கும் கட்சியின் அனுமதியில்லை என்றும், தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒய்.ஜவஹர் அலி மட்டுமே ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் தீரன்

இந்தநிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாக பேராசிரியர் தீரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கவைக்கப்படுவதாக அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கட்சியினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி