கிசு கிசு

ஆர்யாவை மணக்க ஆசைப்பட்ட அபர்னதி இப்போ ஜி.வி. பிரகாஷ் காதலி

ஆர்யா- அபர்னதி அலப்பறை- வீடியோ

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடிக்க உள்ளார்.

ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்னதி. ஆர்யாவுக்கு சரியான ஜோடி இந்த பொண்ணு தான் என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

ஆர்யாவும் அபர்னதி மீது அக்கறை காட்டினார். ஆனால் இறுதியில் யாரையும் திருமணம் செய்யவில்லை.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அந்த படத்தை காவியத் தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்குகிறார்.

வசந்பாலன்

வசந்பாலன்

ஜி.வி. பிரகாஷ், வசந்தபாலன் சேர்ந்து பணியாற்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் சென்னையில் துவங்குகிறது. படத்தில் ராதிகா சரத்குமார், பசங்க படம் புகழ் பாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஹீரோ

ஹீரோ

வசந்தபாலன் படத்தில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் இசையமைக்கவும் செய்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். ஜி.வி. நடித்துள்ள செம படம் நாளை ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின்

ஹீரோயின்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலி ஹீரோயின் ஆனார். தற்போது அவர் வழியில் அபர்னதியும் கோலிவுட்டில் ஹீரோயினாகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி