இலங்கை

ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதி கிரியை

Updated: 14:59 GMT, May 18, 2018 | Published: 14:59 GMT, May 18, 2018 |

0 Comments

1020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் இறுதி கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்தியா சிவகங்கை மாவட்டம் திருப்பந்தூர், அம்பத்தூர் கிராமத்தில் அன்னாரின் இறுதி கிரியைகள் பிற்பகல் இடம்பெற்றது.

சுகயீனம் காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த ஆறுமுகன் தொண்டமானின் தாயாரான திருமதி. ராஜேஸ்வரி அம்மாள் கடந்த 16 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் காலமானார்.

இறுதி கிரியைகளின் போது இந்தியா தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகர்கள், இலங்கையிலிருந்து காங்கிரஸின் உயர் மட்ட குழுவினர் உட்பட மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி