அழகு குறிப்பு

இத கூட கீழ தூக்கிப்போட்றாதீங்க… இத செய்ற மாயமே வேற லெவல்…

எலுமிச்சை

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளைப் போக்க இந்த எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் முக்கிய மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் இவற்றில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது.

நம் அனைவருக்கும் சருமத்தில் அழகு சார்ந்த பிரச்சனைகளான கொப்பளங்கள், வறண்ட சருமம், சருமம் பழுப்பு நிறமாக மாறுதல், பொடுகு, கருப்பு உதடு போன்றவை அடிக்கடி ஏற்படும். இவை எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது எலுமிச்சை. ஒரே மூலப்பொருள் மூலம் உங்களுடைய எல்லா சரும பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமாக இனிப்பான செய்தி தானே?

எலுமிச்சை பயன்படுத்தி பின்பற்றப்படும் எல்லா விதமான வழிமுறைகளும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எளிய குறிப்புகளை வீட்டில் இருந்தபடியே பயன்படுத்தலாம். உங்கள் அழகு சிகிச்சைகளில் எலுமிச்சையை பயன்படுத்தி வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள். இப்போது தொடர்ந்து படித்து வழிமுறையை அறிந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோல்

எலுமிச்சையில் சாறு பிழ்ந்ததும் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதுக்குள்ள இருக்கிற சத்துக்களோட அருமை நமக்குத் தெரியல எனறு தான் சொல்ல வேண்டும். உடலில் இருக்கும் அத்தனை கழிவுகளையும் வெளியேற்றுகிற டீ-டாக்சின் வாட்டரை தயாரிக்கலாம். தோலை ஈரமாக இருக்கும் போது அப்படியே தலைமுடி முதல் உடம்பு, கால் நகங்கள் வரை தேய்க்கலாம். உடம்பே பளபளக்க ஆரம்பித்துவிடும். அதேபோல, தோலை உலர வைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, பொடுகுக்கும் முகத்தை அழகுக்கும் பயன்படுத்த முடியும்.

கரும்புள்ளிகளைப் போக்க

கரும்புள்ளிகளைப் போக்க

எலுமிச்சை ஒரு கிருமிநாசினி. ஆகவே இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கி சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். ஒரு பஞ்சை அந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சில நிமிடங்கள் கழித்து உங்கள் விரல் நுனியால் ஸ்க்ரப் செய்து பின்னர் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றி விரைந்து நல்ல மாற்றத்தை உணருங்கள்.

நகங்கள் வலிமையாக

நகங்கள் வலிமையாக

வலிமையிழந்து அடிக்கடி உடையும் நகங்களுக்கு எலுமிச்சை ஒரு சிறந்த தீர்வாகும். நகங்களின் நிறமிழப்பை இவை கட்டுப்படுத்துகின்றன. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றைக் கலக்கவும். இந்த கலவையில் உங்கள் நகங்களை பத்து நிமிடங்கள் முக்கி எடுக்கவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றலாம்.

சரும பிரகாசத்திற்கு

சரும பிரகாசத்திற்கு

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம், சருமத்திற்கு பிரகாசத்தைக் கொடுக்கின்றன. எலுமிச்சையில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வயது முதிர்வை கட்டுப்படுத்துகின்றது. ஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே உங்கள் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வருவதால் உங்கள் சருமம் பொலிவடைந்து பளபளப்பாக மாறும்.

டோனர்

டோனர்

கட்டிகள் அதிகம் உண்டாகும் சருமத்திற்கு, மேக்கப்பை அகற்ற எலுமிச்சை சிறந்த வழியில் ஒரு டோனர் போல் செயல்படுகிறது. உங்களுக்கு தேவையான பொருட்கள், புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறு சிறிதளவு, சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீர் ஆகியவை . ஒரு கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீர் கலந்து ஒரு கலவை தயார் செய்து கொள்ளவும். இப்போது உங்கள் டோனர் தயார். அதிகமான மேக்கப்பை கழுவ இந்த டோனரை நீங்கள் பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் இருந்து அகலாமல் இருக்கும் மேக்கப் அகன்று விடும்.

பற்கள் வெண்மைக்கு

பற்கள் வெண்மைக்கு

ஆம், நீங்கள் படித்தது சரி தான்! எலுமிச்சை பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்ட் கொண்டு உங்கள் பற்களைத் துலக்கவும். அடுத்த சில நிமிடங்கள் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருக்கட்டும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கு மேல் இந்த பேஸ்டை வாயில் வைத்திருக்க வேண்டாம். உடனடியாக வாயைக் கழுவுங்கள். நீண்ட நேரம் இந்த பேஸ்ட் உங்கள் பற்களில் இருப்பதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படக் கூடும்.

பிங்க் நிற உதடுகளைப் பெற

பிங்க் நிற உதடுகளைப் பெற

எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் தன்மை, உதடுகளில் உள்ள அழுக்கைப் போக்கி, பளிச்சிட வைக்க உதவுகிறது. தேன் உதடுகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது , மேலும் உதடுகளுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. இந்த சிகிச்சைக்கு உங்களுக்கு தேவையான பொருட்கள், தேன் சில துளிகள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மட்டுமே. இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்து உதடுகளில் தடவவும். ஒரு மணி நேரம் அப்படியே ஊற விட்டு பின் ஈரத் துணியால் உதடுகளைத் துடைக்கவும்.

பொடுகைப் போக்க

பொடுகைப் போக்க

எலுமிச்சை ஒரு கிருமிநாசினி என்பதை நாம் முன்பே அறிவோம். மேலும் இதன் அழற்சி தடுக்கும் தன்மையால் வறண்ட மற்றும் அரிப்பு மிகுந்த உச்சந்தலையை நிமிடத்தில் சரி செய்கிறது.

ஒரு எலுமிச்சையை பாதியாக நறுக்கி, அதில் ஒரு பாதியை எடுத்து உங்கள் உச்சந்தலையில் மென்மையாக தேய்க்க வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனைப் பின்பற்றலாம்.. இதனால் பொடுகு தொந்தரவு குறையும்.

வேனில் கட்டிகள்

வேனில் கட்டிகள்

தோல் உரிதல் மற்றும் வேனில் கட்டிகளுக்கும் எலுமிச்சை சிறந்த தீர்வைத் தருகிறது. எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் வேனிர்கட்டிகள் எளிதில் மறைந்து விடும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் அதன் தன்மை மறைகிறது. வயது முதிர்வையும் இது தடுக்கிறது.

2-3 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 ஸ்பூன் புளிப்பு க்ரீம் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் முகம் கழுத்து ஆகிய இடத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால், உங்கள் சருமம் ஈரப்பதத்தைப் பெறுகிறது , இதனால் உங்கள் வறண்ட சருமம் பொலிவைப் பெரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி