இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 72 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.டி வில்லியஸ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சில் இந்தியணி சகல விக்கட்டக்களையும் பறிகொடுத்து 209 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.ஹர்திக் பாண்டியா 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆடிய தென்னாபிரிக்கா சகல விக்கட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.208 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் களம் நுழைந்த இந்தியாயள 135 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறி கொடுத்து தோல்வியை தழுவியது.பிளேண்டர் 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.போட்டி கேப் டவுனில் இடம்பெற்றது.இந்த வருடத்தில் விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்காவிடம் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
