ஆரோக்யம்

இனி பேலியோ டயட்டிலும் சர்க்கரை சாப்பிடலாம்… ஆனா இது வெள்ளை சர்க்கரை இல்ல தேங்காய் சர்க்கரை

ஊட்டச்சத்துக்கள்

இதில் விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, காப்பர், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் பைட்டோ நியூட்ரிஷனான ப்ளோனாய்டுகள், பாலிபினோல், ஆந்தோசயனின் போன்றவைகளும் உள்ளன.

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ்

இந்த தேங்காய் சர்க்கரை டயாபெட்டீஸ்க்கு பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் குளுக்கோஸ் உறிஞ்சும் திறனை மெதுவாக்கி சர்க்கரை அளவை சமநிலையாக்குகிறது. அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் படி நீரிழிவு நோயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த தேங்காய் சர்க்கரையை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் இதில் 15 கலோரிகள், 4 கிராம் கார்போஹைட்ரேட் போன்றவைகள் அடங்கியுள்ளன.

வெள்ளை சர்க்கரையை விட மேலானது

வெள்ளை சர்க்கரையை விட மேலானது

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் அதிக அளவு ப்ரக்டோஸ் மட்டுமே உள்ளது. கலோரிகள் எதுவும் கிடையாது. அதே மாதிரி அதிகமான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் இல்லை. ஆனால் இந்த தேங்காய் சர்க்கரையில் இரும்புச் சத்து, ஜிங்க், கால்சியம், பொட்டாசியம், பாலிபினோல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உணவு மற்றும் ஆராய்ச்சி மையம் கருத்துப்படி வெள்ளை சர்க்கரையில் இருப்பதை விட இதில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் இருமடங்கு அதிகமாக உள்ளது என்கின்றனர்.

கிளைசெமிக் குறியீட்டு எண்

கிளைசெமிக் குறியீட்டு எண்

இதன் கிளைசெமிக் குறியீட்டு எண் வெள்ளை சர்க்கரையை விட குறைவு. அதிக கிளைசெமிக் குறியீட்டு எண் உடைய பொருட்கள் நமது இன்சுலின் அளவை பாதித்து இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது. எனவே தேங்காய் சர்க்கரை நமக்கு பாதுகாப்பானது.

குறைவான ப்ரக்டோஸ்

குறைவான ப்ரக்டோஸ்

இந்த ப்ரக்டோஸ் பொருள் நமது உடலில் அப்படியே கொழுப்பாக மாறி தங்கி விடும். இதை உடைக்க நமது கல்லீரலுக்கு ட்ரைக்ளிசரைட்ஸ் தேவைப்படுகிறது. எனவே இந்த ட்ரைக்ளிசரைட்ஸ் அதிகமாகும் போது இரத்த அழுத்தம், உடல் பருமன், டயாபெட்டீஸ், கெட்ட கொழுப்புகள், நல்ல கொழுப்பு குறைவு போன்ற ஏராளமான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். தேங்காய் சர்க்கரையில் வெறும் 20-30% மட்டுமே ப்ரக்டோஸ் உள்ளது. 70-75% இதில் சுக்ரோஸூம் காணப்படுகிறது.

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்

இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது குடலுக்கு மிகவும் நல்லது. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் தினமும் இந்த தேங்காய் சர்க்கரையை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பூமியின் நண்பன்

பூமியின் நண்பன்

ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளாண் அமைப்பு கருத்துப்படி உலகிலேயே மிகச் சிறந்த உணவாக இந்த தேங்காய் சர்க்கரையை கூறுகிறது. மேலும் இந்த தேங்காய் சர்க்கரை உற்பத்திக்கு குறைந்த அளவு நீர் மற்றும் எரிபொருள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே இதில் வெள்ளை சர்க்கரையை போல் கெமிக்கல்கள் மற்றும் செயற்கை கலப்படங்கள் இல்லை.

பேலியோ டயட் முறை

பேலியோ டயட் முறை

பேலியோ டயட் முறை இருப்பவர்களுக்கு இந்த தேங்காய் சர்க்கரை ஏதுவான ஒன்றாகும். எனவே நீங்கள் தீவிரமான டயட் முறையை மேற்கொண்டால் இந்த தேங்காய் சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

தேங்காய் சர்க்கரை நமது உடலில் கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது. இதில் குறைவான ப்ரக்டோஸ் இருப்பதால் கொழுப்புகள் உடலில் தங்குவது குறைக்கப்படுகிறது. ஆனால் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கை மட்டுமே கொடுக்கிறது. எனவே தேங்காய் சர்க்கரையை உணவில் சேருங்கள்.

இரத்த ஓட்டம் அதிகரித்தல்

இரத்த ஓட்டம் அதிகரித்தல்

தேங்காய் சர்க்கரையில் உள்ள இரும்புச் சத்து நமது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த இரும்புச் சத்தால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் அனிமியா, தசைகள் பலவீனம், தலைவலி, சோர்வு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

உடல் சக்தி

உடல் சக்தி

இதிலுள்ள சத்துக்கள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இந்த சத்துக்கள் நமது உடலில் நீண்ட நேரம் இருப்பதால் நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன் செயல்பட முடியும்.

பயன்படுத்துவது எப்படி?

பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த தேங்காய் சர்க்கரையை பயன்படுத்தலாம். இது வெள்ளை சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையுடன் காணப்படும். எனவே இதை குறைந்த அளவு எடுத்து பயன்படுத்துங்கள். ஜூஸ், ஸ்மூத்தி போன்ற எனர்ஜி டிரிங்க்இல் கூட இதை சேர்த்து குடிக்கலாம். உங்கள் தினசரி காபி மற்றும் தேநீரில் கூட இதை சேர்த்து வந்தால் டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் நிம்மதியாக வாழலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி