கிசு கிசு

இமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா?

இமய மலைக்கு அனுஷ்கா ஏன் போனாங்க தெரியுமா?- வீடியோ

சென்னை: அனுஷ்கா இமயமலைக்கு சென்று வந்துள்ளார்.

படங்களில் பிசியாக இருக்கும் அனுஷ்கா ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறதாம்.

இந்த ஆண்டு இறுதியில் அவரது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இமயமலை

இமயமலை

அனுஷ்கா அண்மையில் இமயமலைக்கு சென்று வந்தாராம். அவரின் பெற்றோரும் பல கோவில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அனுஷ்காவின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் அவர்கள் கோவில், கோவிலாக ஏறி இறங்குவதாக கூறப்படுகிறது.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸுக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து வைக்கப்படும் என்று அவரின் பெரியப்பா தெரிவித்துள்ளார். அனுஷ்காவுக்கும் இந்த ஆண்டே திருமணம். ஒரு வேளை அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் தான் திருமணமா?

பரிகாரம்

பரிகாரம்

அனுஷ்காவின் பெற்றோர் மாப்பிள்ளை தேடாமல் பிரபாஸுக்காக தான் கோவில், கோவிலாக சென்று வருகிறார்களோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அந்த நாளை தான் அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி