விளையாட்டு

இலங்கை அணி பங்களாதேஷ் பயணம்

டெஸ்ட், இருபதுக்கு 20 மற்றும் முக்கோண ஒருநாள் போட்டிகள் அடங்கலான கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி இன்று அதிகாலை தாயகத்தில் இருந்து புறப்பட்டது.

முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும்.

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 31ஆம் மற்றும் பெப்ரவரி 8ஆம் திகதி ஆரம்பமாகும்.

பெப்ரவரி 15ஆம் 18ஆம் திகதிகளில் இவ்விரு அணிகளும் இ20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி