கலாச்சாரம்

இவ்வளவுதாங்க ஹாப்பி வுமன்ஸ் டே!


Essays

Sutha

மகளிர் தினம்
காலையில் எழுந்து அவசர கதியில் வாசல் கூட்டி
எதோ ஓர் கோலம் போட்டு
கவர் பாலை எடுத்து வந்து காய்ச்சி
தேநீர் தயாரித்து எல்லோரிடமும் கோப்பைகளை தந்து விட்டு,
கொஞ்சம் சூடு ஆறட்டும் குடித்துக் கொள்ளலாம் என்று ஓரம் வைத்து
குக்கரை ஏற்றி இட்டலிக்கு அடுப்பிலேற்றி

காய்கறிகள் வெட்டியெடுத்து
கூடவே கத்தி விரலை சற்று பதம் பார்க்க
வாயில் வைத்து இரத்தம் துடைத்து, குடித்து
கைகழுவி பின் விட்ட பணி தொடர்ந்து
சமையல் முடித்தபின் சட்டென பொட்டில் அடிக்கும்..
“ஐயோ டீ கூட குடிக்கவில்லையே”
ஆறிப்போன டீயை ஒரே மடக்கில் குடித்துவிட்டு
சாம்பார் சட்னி பொரியல் என்று செய்து முடித்து
டிபன் பாக்ஸ் தேடியெடுத்து மூவருக்கு கட்டி
கவர் போட்டு எடுத்து வைத்து
அப்பாடா என்று சின்னதாக ஓய்ந்து
பின் சுதாரித்து சமையலறை விட்டு நீங்கி
துணிமணிகளுடன் குளியலறை ஓடி காக்கை குளியல் போட்டு
ரப்பர் பாண்ட் போட்டு ஈர முகத்தில் பவுடர் தூவி
பொட்டு வைத்து டூ வீலர் சாவி தேடி எடுத்து
அவசரமாய் ஸ்டார்ட் செய்து
கடமுடவென ஒட்டிப்போய்
ஆஃபிஸில் லேட் இல்லாமல்
அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்துப்போட்டு
அப்பாடா என்று நிமிரும்போது
வாழ்த்து சொல்கிறார்கள் சக ஊழியர்கள்
“ஹாப்பி விமென்ஸ் டே” என்று….
புன்னகையுடன் நானும் சொல்கிறேன் …. தாங்க் யு!

– ஆகர்ஷிணி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

English summary

Women’s day is being celebrated all over the world. Everyone is celebrating but what is the reality: Read this poem written by our reader Akarshini.

Story first published: Thursday, March 8, 2018, 15:35 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி