இலங்கை

ஈழம் சிவசேனை தொடர்பில் முறைப்பாடு!

வடக்கில் சிவசேனை அமைப்பினை போன்று தென்னிலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் அரசியலமைப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமென தெரிவித்துள்ளார்கள்.

 

இவ்வாறு எவருக்கு எதிராகவும் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுக்க முடியாதவாறு இந்த புதிய தேர்தல் முறைச் சட்டம் அமைந்துள்ளது.

எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் உள்ளடக்காத தேர்தலாக இந்த தேர்தல் சட்டம் அமைக்கப்பட்டு, முழுக்க அபிவிருத்தி திட்டத்திற்குரிய தேர்தலாக அமையவேண்டுமென சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிலவரங்களை அடுத்த மாவட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வடமாகாணத்தில் அதிலும் யாழ். மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் மிகக்குறைவாக காணப்படுகின்றன.

கடந்தகாலத் தேர்தல்களின் போது, யாழ்.மாவட்டத்தில் அதிகளவான வன்முறைகள் இடம்பெற்றதை அவதானித்திருந்தோம். முனைய காலங்களில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக காணப்படுகின்ற பிரதேசமாக யாழ்.மாவட்டம் காணப்பட்டது.

தேர்தல் பரப்புரைகளின் போது, வாக்காளளுக்கு உலர் உணவுப் பொருள்களை விநியோகிப்பதாக வேறு மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் இருந்து மிகவும் குறைவான முறைப்பாடுகளே கிடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இம்முறை தேர்தல் வன்முறைகள் யாழ்.மாவட்டத்தில் குறைவாக காணப்படுகின்றமையினால், அதற்குரிய கௌரவம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையே சென்றடையவேண்டும்.

புதிய தேர்தல் முறையின் ஊடாக பல்வேறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமையால், அவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர்களின் ஆலோசனைகளின் மூலம் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற போது, நிலையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதில் கபே அமைப்பிற்கு நம்பிக்கை உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி