அழகு குறிப்பு

உங்க கால்களும் இப்படி வழவழன்னு இருக்கணுமா?… இத தடவுங்க…

கற்றாழை ஜெல்

தோலை மிருதுவாக்குவதில் கற்றாழை ஜெல் நிகராக எந்தப் பொருளையும் பரிந்துரைக்க முடியாது. உடலுக்கு ஊட்டமளிப்பதோடு, உற்சாகத்தையும் பெருக்கி ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை சாத்தியப்படுத்தக்கூடியது. கால்களை அழகாக மிளிர வைக்கும் திறனைப் பெற்ற கற்றாழை ஜெல், தோல்களைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு அற்புதமான மருந்து. நாள்தோறும் உங்கள் கால்களில் கற்றாலை ஜெல் பயன்படுத்துங்கள் உங்களிடம் இந்திரலோகத்து சுந்தரி கூட தோற்றுப் போவாள்

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கால்கள் வறண்டு போகிறது. செதில் செதிலாக உரிகிறது. என்ன செய்யப் போகிறேன் என்று கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வைக்காதீர்கள். கவலை வேண்டாம். இயற்கையான மென்மையை வழங்குவதோடு, பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கக்கூடிய அற்புதமான மருந்தாக பேக்கிங் சோடா இருக்கவே இருக்கிறது. குளிர்ச்சியுடன் அனைத்து மருத்துவ குணங்களையும் கொண்ட இது, உடனடி நிவாரணியாகத் திகழும். பேக்கிங் சோடாவை தினந்தோறும் தடவ, கால்கள் தங்கத்துக்கு நிகராகப் பளபளக்கும். இப்போது தரையில் நடக்கக்கூட நீங்கள் வெட்கப்படுவீர்கள்.

பாதாம் ஆயில்

பாதாம் ஆயில்

தோல்களில் நிறமிகளை செம்மைப்படுத்தி பிரகாசப்படுத்துவதில் ஆல்மண்ட் ஆயில் தான் என்பதை சத்தியம் செய்து பரிந்துரைக்கலாம். ஊட்டமளிக்கும் ஒரு மருத்துவ நிபுணரைப் போல் செயல்பட்டு உங்களுக்கான ஒளிமயமான வழிகளை திறக்கச் செய்யும். கால்களை மிருதுவாக்கும் தன்மையும், ஊட்டமளிக்கும் குணமும் நேசிக்கச் செய்யும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு கால்களில் தேய்த்துப் பாருங்கள். நள்ளிரவுக்கும் உங்கள் கால்கள் மிளிரத் தொடங்கி விடும்.

வெள்ளரி

வெள்ளரி

கால்கள் மரமரத்துப் போனதா? வறட்டுத்தனமான தோல்கள் உங்களை பாடாய்படுத்துகிறதா? இதற்கு ஏன் இவ்வளவு கோபம். வெள்ளரி பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் உள்ள பிரச்சினைகளுக்கு பூரண குணமளிக்கும் ஆற்றலைப் பெற்றது. உடனடியாக உங்கள் கால்களில் புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.தோல்களில் ஏற்பட்டுள்ள மங்கலான நிறத்தை விரட்டி ஒருவித பிரகாசத்தை ஏற்படுத்தும். இப்போது பொது இடங்களில் நடக்கலாம், ஓடலாம், ஆடலாம். பல கண்கள் உங்கள் கால்களைத் தான் பார்க்கும்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

உடலில் ஏற்படும் பல்வேறு தோல் வியாதிகளுக்கு ஆப்பிள் சிடர் வினிகரைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அந்த அளவுக்கு அதில் நொதிகளும், ஊட்டச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. கால்களை மிருதுவாக்கி பரவசப்படுத்தில் ஆப்பிள் சிடர் வினிகர் நம்பகத்தன்மையை இழந்தது கிடையாது. அழகுடன் இளமை ததும்பும் கால்களை வழங்கும் அற்புத ஆற்றல் அதற்கு உண்டு. இப்போது நீங்கள் கெண்டைக்காலுக்கு மேலே வேட்டி, சேலையைத் தூக்கினாலும் பரவாயில்லை என்று பார்த்து விட்டுத்தான் போவார்கள். அந்த அளவுக்கு ஒய்யாரம் வந்து விடும்.

கிளிசரின்

கிளிசரின்

உங்கள் கால்கள் மென்மையானதாக மாறி பரவசப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா. இதற்கு நீங்கள் அதிக பிரயாசைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வறண்டு போன உங்கள் கால்களில் கிளிசரினைத் தடவிப்பாருங்கள், மரத்துப் போன பாதங்கள் புத்துயிர் பெறும், சொரசொரத்துப்போன தோல்கள் மிருதுவாகும். தினந்தோறும் அதைப் பயன்படுத்த அழகான தோற்றம் பெற்ற கால்களால் நீங்கள் ஆச்சரியத்தில் மிதப்பீர்கள்

தேன்

தேன்

தேனில் உள்ள ஊட்டச்சத்தையும், தோல்களுக்கு அது பலனளிக்கும் என்பதை நீங்கள் முன்னெப்போதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அழகான, வசீகரிக்கும் கால்கள் உங்களுக்கு கிடைக்கப்பதற்கு இது உதவுகிறது. கடவுளுக்கு நிகரான மகிமையும், தோல்களை பளபளக்கச் செய்யும் ஆற்றலும் பயன்படுத்துவோரை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. ஒரு தடவை நீங்கள் அதனை பயன்படுத்தத் தொடங்கி விட்டால் தேனுக்கு அடிமையாகி விடுவீர்கள். பிறகு எல்லாமே இனிமையாகத்தான் நடக்கும்

தேங்காய் எண்ணெய் - சுகர்

தேங்காய் எண்ணெய் – சுகர்

வறட்சியான சருமங்களைக் கொண்ட கால்களுக்கு ஒரு நிகரில்லாத மருந்தாக தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்த கரைசல் உள்ளது. தினந்தோறும் உங்கள் கால்களில் தடவி வர, சொரசொரப்பு, மரமரப்பெல்லாம் மாறிவிடும். இது உடலில் ஊடுருவிச் சென்று மங்கலான நிறத்தையும், செதில்களாக பிரியும் தோல்களையும் மாற்றும் திறனைக் கொண்டது.

ஜோஜோபோ ஆயில்

ஜோஜோபோ ஆயில்

குளிர்ச்சியான ஜோஜோபோ ஆயில் தோல்களுக்கு பலனளிக்கும் நம்ப முடியாத ஆற்றலைக் கொண்டது என்றால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும். வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை உருவாக்கும் நல்ல நிபுணராக செயல்படுகிறது. இதனால் ஒரு மிருதுவான தன்மையையும், கால்களில் அழகையும் ஏற்படுத்த முடிகிறது. நீங்கள் புதிய பேரின்பத்தை அடைய ஜோஜோபோ ஆயில் சிறந்த ஒன்றாகும்

சியா பட்டர்

சியா பட்டர்

உடலில் தோலின் நிறமிகளைத் தூண்டி ஒரு முழுமையான மருத்துவப் பொருளாக வெண்ணெய் திகழ்கிறது. வறட்டுத் தன்மையும், மரத்துப் போன கால்களும் இருக்கிறதா? வெண்ணெயை தினந்தோறும் பயன்படுத்திப் பாருங்கள்.சில தினங்களிலேயே நீங்கள் ஒரு கவர்ச்சியூட்டக்கூடிய கால்களைப் பெற்று விடுவீர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கால்களுக்கு நிகராக உங்கள் கால்களும் தகதகக்கும்..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி