ஆரோக்யம்

உணவுகளில் இருக்கும் உண்மையான சர்க்கரை அளவு கண்டுபிடிக்க தெரியுமா?

வெவ்வேறு பெயர்கள் :

இனிப்புச் சுவையை சேர்க்க வெவ்வேறு பெயர்களில் இனிப்பு சேர்க்கப்படுகிறது. பாக்கெட் உணவுகள் வாங்கும் பலரும் அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை யாரும் பார்ப்பதில்லை.

பார்ப்பவர்களும் சர்க்கரை என்ற பெயரை மட்டும் தேடுவார்கள் என்பதை அறிந்து வெவ்வேறு பெயர்களில் இனிப்பினை சேர்க்கிறார்கள்.

சிரப் :

சிரப் :

உணவு உற்பத்தி செய்கிறவர்கள் இனிப்பினை சிரப் வடிவில் சேர்க்கிறார்கள். சிரப் பிற திரவங்களை விட திக்காக இருக்கும். அவற்றில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.

இதுவும் நேரடி பெயரில் அல்லாது வெவ்வேறு பெயர்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.

வகைகள் :

வகைகள் :

பெயர்களில் மட்டுமல்ல பல்வேறு வகையான சர்க்கரையையும் பயன்படுத்துகிறார்கள். நாம் வெள்ளைச் சர்க்கரை மட்டும் தான் நம்முடைய எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அது கிடையாது.

உணவுப் பொருட்களில் பல்வேறு வகையான சர்க்கரை அதாவது இனிப்புகள் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்பு குறைவு :

இனிப்பு குறைவு :

சுகர் ஃப்ரீ பிஸ்கட், சுகர் ஃப்ரீ என்று எது கொடுத்தாலும் சில உணவுகளுக்கு சர்க்கரை தான் அடிப்படையான விஷயமாக இருக்கும். அதனால் விளம்பரங்களில் சொல்லப்படுகிற சுகர் ஃப்ரீ என்று சொல்வது எல்லாம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.

டயட் இருப்பவர்கள் அதிகமாக ப்ரோட்டீன் பார் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் சர்க்கரைப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை மறக்க வேண்டாம். 20 கிராம் ப்ரோட்டின் பாரில் 29 கிராம் வரை சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.

அளவு :

அளவு :

உணவுகளில் சர்க்கரை குறிப்பிட்டிருக்கும் அளவை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதால் அதீத இனிப்பாக இருக்கும் என்பது அர்த்தமல்ல. காலை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய சில வகை ஓட்ஸ், யோகர்ட் ஆகியவை சராசரி இனிப்புடன் தான் இருக்கும் ஆனால் அவற்றின் சர்க்கரை அளவு அதிகபட்சமாக இருக்கும்.

ஆறு டீஸ்பூன் யோகர்ட்டில் 29 கிராம் சர்க்கரை வரை இருப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் எல்லாம் அதிகப்படியான சர்க்கரை இருக்கும் என்பதையே உணராமல் சர்க்கரை கம்மியாகத்தானே இருக்கிறது என்று சொல்லி அதிகப்படியான சர்க்கரையை உடலில் சேர்த்து விடுகிறார்கள்.

சர்க்கரை இனிப்புகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் சாப்பிடுகிற பாக்கெட் உணவின் மூலக்கூறில் கூட சர்க்கரை இருக்கலாம்.

ஆரோக்கியமான சர்க்கரை :

ஆரோக்கியமான சர்க்கரை :

சர்க்கரையில் ஆரோக்கியமான சர்க்கரை என்று ஒன்று இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை இதுவும் ஓர் விளம்பர யுத்தி தான். ஹெல்தி ஸ்வீட் என்ற் அடைமொழியுடன் விற்கப்படுவதால் அந்த சர்க்கரை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தான் தரும் என்று அர்த்தம் கிடையாது.

சில உணவுகளில் நோ ரீஃபைண்ட் சுகர் அல்லது ரீஃபைண்ட் சுகர் ஃப்ரீ என்று சொல்லப்பட்டிருக்கும். அப்படியென்றால் அதில் வெள்ளைச் சர்க்கரை வடிவமாற்றி அதிலிருக்கும் மொலாசஸ் நீக்கி சேர்த்திருக்கிறார்கள் மற்றபடி அதில் சர்க்கரையே இல்லை என்று அர்த்தமன்று.

கூடுதல் சர்க்கரை :

கூடுதல் சர்க்கரை :

உணவில் ஏற்கனவே சர்க்கரை இருக்கும் பல்வேறு காரணங்களுக்காக குறிப்பாக சுவைக்காக கூடுதலான சர்க்கரையை சேர்த்துக் கொள்வார்கள்.

உதாரணத்திற்கு பாலில் யாரும் இனிப்பு சேர்க்காமல் குடிப்பதில்லை. சிலர் பாதி இனிப்பாவது சேர்க்கிறார்கள்.ஒரு கப் பாலில் மூன்று டீஸ்பூன் அளவு அதாவது 13 கிராம் அளவு சர்க்கரை இருக்கிறது. இதைத் தவிர ஒரு கப் பாலில் எட்டு கிராம் ப்ரோட்டின் மற்றும் கால்சியம் சேர்ந்திருக்கிறது.

ஜூஸ் :

ஜூஸ் :

பாக்கெட் உணவுகளை வாங்கும் உண்மையில் அந்த உணவுப்பொருளில் இருக்கிற சர்க்கரை அளவு என்ன, கூடுதலாக எவ்வளவு சேர்த்திருக்கிறார்கள் என்ற கணக்கு சொல்வதில்லை. இதனால் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அளவினை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் சில ஜூஸ்,சோடாக்களில் முழுதாய் இனிப்பு மட்டுமே இருக்கிறது அதை உணராமல் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆரோக்கியம் :

ஆரோக்கியம் :

இன்றைக்கு டயட் என்ற வார்த்தையின் மோகம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவு என்பதை உங்களுக்கு நம்ப வைக்க லைட்,லோ ஃபேட்,சுகர் ஃப்ரீ,ஹெல்தி இப்படி அர்த்தம் தருகிற மாதிரியான எந்த வார்த்தைகள் கொடுத்திருந்தாலும் அவற்றை நம்பி வாங்க வேண்டாம்.

பாக்கெட்டில் அடைக்கட்டு மூன்று மாதம் வரை கெடாது அல்லது ஆறு மாதம் வரை கெடாது என்று ஒரு உணவுப் பொருள் விற்கிறார்கள் என்றால் அதில் கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்,சர்க்கரை இருப்பதினால் இனிப்பு சுவை கொண்டதாக் இருக்கும் என்று அர்த்தமல்ல அதன் மூலக்கூறுகளில் கூட சர்க்கரை இருக்கலாம். ஏனென்றால் முன்னரே இயற்கையாகவே அந்த உணவில் சர்க்கரை இருக்கும் கூடுதலாக சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது என்று பார்த்தோமே…

யுக்தி :

யுக்தி :

சர்க்கரை குறைவாக இருந்தால் தான் வாங்குவார்கள் என்பதால் நிறுவனங்கள் செய்கிற யுக்தி இது. 0.010 கிராம்ஸ் பெர் செர்விங் என்று குறிப்பிட்டிருப்பார்கள். உடனே அதில் வெறும் 0.010 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது என்று நம்பி வாங்கிவிடும். அருகில் per servings என்று மிகச் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படியானால் ஒரு முறை அதுவும் 3.5 அவுன்ஸ் அளவு கிட்டத்தட்ட 100 கிராம் அளவிலான அந்த பாக்கெட் உணவில் 0.010 கிராம் சர்க்கரை இருக்கிறது.

சாப்பிடும் போது சரியாக 100 கிராம் அளவு பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்ன? இவற்றையெல்லாம் பாக்கெட் உணவு வாங்குவதற்கு முன்னதாகவே சரி பார்த்து வாங்காமல் தவிர்த்திட வேண்டும்.

ஸ்வீட் வெர்சன் :

ஸ்வீட் வெர்சன் :

மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற ஒரு பொருள் அப்படியே லோ சுகர் என்று விற்கப்படும். ஆக சந்தையில் சர்க்கரை இருக்கிற, சர்க்கரை இல்லாத இரண்டு பாக்கெட்டுகள் இருக்கும். கடைக்காரர்களே இது சர்க்கரை சேர்க்கப்பட்டது, இது சர்க்கரை இல்லாதது என்று பிரித்து சொல்வதைக் கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிடாதீர்கள்.

இது மக்களை குழப்புவதற்காகவே.

டிப்ஸ் :

டிப்ஸ் :

உடலில் அதிகப்படியான சர்க்கரையை சேர்க்கமால் தவிர்ப்பதற்கு சில அவசியமான டிப்ஸ், உணவில் சுவைக்காக கூடுதலாக சேர்க்கிற சர்க்கரையை முதலில் கட் செய்திடுங்கள். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் சில நாட்களில் பழகிடும்.

உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட பழகுங்கள். துரிதமான அதே சமயம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். வேறு வழியின்று வாங்குகிறீர்கள் என்றாலும் மேலே குறிப்பிட்ட வழிகளில் எல்லாம் ஏமாந்து விடாமல் தவிர்க்கவும்.

தண்ணீர் :

தண்ணீர் :

உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து கிடைக்கவில்லை என்றாலும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். எப்போதும் சோர்வாக தூக்கம் வருவது போல இருக்கும். அந்த நேரத்தில் இனிப்பினை எடுத்துக் கொண்டவுடன் சுறுசுறுப்பாகும் என்று நினைத்து காபி டீ குடித்து விடுவோம்.

ஒன்றிரண்டு நாள் என்றல்லாது தினமும் குடிப்பதால் அது பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீரை குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி