தெரிந்துகொள்ளுங்கள்

உயிர்க்கொல்லி நூடுல்சால் ஏற்படும் தீமைகள்Last Updated:
சனி, 30 டிசம்பர் 2017 (15:56 IST)


இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.


குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் பெற்றோர்கள், குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.


 


நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் குறைவு என்பதால் பசியை  அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். 


 


மைதாவாலான நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளுட்டமேட்என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும் மேலும் இதய நோய்க்கும் வழிவகுக்கும்.


 


டயட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.கர்ப்பிணிகள் நூடுல்ஸை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. 


 


நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதன் விளைவாக மலக்குடல் புற்றுநோய் வர வழி வகுக்கும்  மேலும் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி