சீரியல் ஸ்பெசல்

என்னாது, ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா செம்பா?

சென்னை: ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் இருந்து தான் விலகுவதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆல்யா மானசா.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் அவர் அப்பாவி பெண் செம்பாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மானசா ராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் சீரியல் பற்றி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை நடிப்பேன். உங்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

செண்பாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

English summary

Actress Alya Manasa has made it clear that she is not quitting Raja Rani television serial.

Story first published: Tuesday, November 7, 2017, 9:48 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி