ஆரோக்யம்

என்ன! ஆவாஅடோ -க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா?… இன்னுமா தெரிஞ்சிக்கல…

ஆவாஅடோ – அர்த்தம்

நம்ம உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காக நாம் டயட்டில் இருக்கிறோம் இல்லையா?… அதுபோல இந்த ஆவாஅடோவும் ஒரு டயட்டோட பேருதாங்க. ஆங்கிலத்தில் BRAT Diet என்ற பெயரில் ஒரு டயட் இருக்கு. அது என்னன்னா (banana, rice, applesauce, toast) இந்த 4 வார்த்தைகளோட முதல் எழுத்தும் சேர்த்தது தான் இந்த BRAT Diet. அதேமாதிரி, அதையே கொஞ்சம் இடத்தை மட்டும் மாத்தி வைச்சது தான்”இந்த ஆவோஆடோ. ( ஆப்பிள் சாஸ், வாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட்) இந்த அடைப்புக்குள்ள இருக்கிற வார்த்தைகளோட முதல் எழுத்தை சேருங்க. ஆவாடோ வந்திடுச்சா.

எதற்கு இந்த ஆவாஆடோ டயட்

எதற்கு இந்த ஆவாஆடோ டயட்

இவ்வளவு கிறுக்குத்தனமா யோசிக்கிறீங்களே! இத நம்பலாமான்னு தானே கேட்கறீங்க… தாராளமா நம்பலாம். வாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட், ஆப்பிள்சாஸ் இந்த நான்குமே வயிற்றுப் பிரச்னைகளை சரிசெய்து ஜீரண சக்தியை துரிதப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் இந்த டயட் மூலம் வயிற்றுக்கோளாறுகளை மிக எளிதாக சரிசெய்துவிட முடியும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.

அரிசி சாதம்

அரிசி சாதம்

வயிற்றுக்கடுப்பு,குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்பளர் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணைய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும். நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருள் அரிசி. காலங்காலமாக நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வர இன்றைய தலைமுறையினரோ அதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது.

அது சாப்பிடக்கூடாது உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அரிசியில் அத்தனை சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

ஆப்பிள்சாஸ்

ஆப்பிள்சாஸ்

ஆப்பிள் சாஸில் பெக்டின் அதிகம் உள்ளதால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த இது உதவும். இதை உலர்ந்த ரொட்டியில் தடவி, ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டு வர, வயிற்றுப்போக்கிலிருந்து விரைவாக விடுதலை கிடைத்து விடும்.

டோஸ்ட்

டோஸ்ட்

பிரெட் டோஸ்ட்டில் மிகக்குறைந்த அளவில் கிளைசெமிக் உட்பொருள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளும்கூட இதை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட உணவுகளுள் இந்த பிரெட் டோஸ்ட்டும் ஒன்று.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது வீட்டில் பிரட் கொடுப்பார்கள். அது ஏதோ ஒரு காரணத்தால் கொடுக்கப்படுவது அல்ல. உண்மையாகவே அதன் தன்மையறிந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவாஆடோ டயட்டை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் உண்டாகும் போது மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

இந்த அவாஆடோ டயட் என்பது அதிக அளவு புரோட்டீன், அதிக கொழுப்பு மற்றும் அதிக அளவ நார்ச்சத்துக்கள் அடங்கிய ஒரு கலவையான சரிவிகித டயட் என்று சொல்லலாம். அதோடு இதில், விட்டமின் ஏ, விட்டமின் பி12, கால்சியம் ஆகியவை நிரம்பியிருக்கிறது. குறிப்பாக,இந்த டயட் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு உண்டாகும் சமயத்தில் உடலில் உள்ள சக்தி முழுக்க வீணாகிப் போய்விடும். அதிலிருந்து மீள்வதற்கு இந்த டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சேர்த்துக்கொள்ள வேண்டியவை

சேர்த்துக்கொள்ள வேண்டியவை

வாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட், ஆப்பிள் சாஸ் என்ற இந்த டயட்டை மேற்கொள்ளும் போது வேறு எதையும் சாப்பிடாமல் இருக்க முடியாதல்லவா?… அதனால் இவற்றுடன் உப்பு பிஸ்கட், சூப், உருளைக்கழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ஸ்டீம்டு சிக்கன், சிக்கன்அல்லது வெஜிடபிள் சூப், ஓட்ஸ், வாட்டர்மெலன் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

பொதுவாக இந்த டயட்டை வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கும்போது எடுத்துக் கொள்ளலாம். அந்த சமயங்களில் பால் பொருள்கள், சர்க்கரை, கொழுப்பு உணவு, காரமான உணவுகள், ஆல்கஹால், காபி,

செயற்கை இனிப்பு வகைகள், பீன்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி