ஆரோக்யம்

ஒரு நாளைக்கு ரெண்டு முட்டை சாப்பிட்டா மஞ்சள் காமாலை வருமா?… உண்மை என்ன?

ஊட்டச்சத்துக்கள்

இரண்டு பெரிய முட்டையில் உங்களுக்கு,

13 கிராம் புரதம்

9.5 கிராம் கொழுப்பு

56 மில்லி கிராம் கல்சியம்

1.8 மில்லி கிராம் இரும்பு போன்றவை உள்ளது.

கோழி முட்டைகள் மட்டும் புரதத்தின் ஆதாரம் அல்ல, வாத்து முட்டைகளும் ஆரோக்கியமானவை. மஞ்சள் கருவை விட வெள்ளை கருவில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம்.

நன்மைகள்

நன்மைகள்

1. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

2. வைட்டமின் டி கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

3. கண்பார்வை அதிகரிக்கிறது

4. இதய நோய் அபாயம் குறைக்கப்படுகிறது

5. எடை குறிப்பில் உதவுகிறது

6. சரும அழகை அதிகரிக்கிறது

7. புற்று நோய் அபாயத்தைக் குறைக்கிறது

8. கருவுறுதலை ஊக்குவிக்கிறது

மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி

கோலின் என்பது மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு பொருள் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முட்டையில் உள்ள பாஸ்ப்போலிபிடில் உள்ள கோலின் , மூளை அணுக்களின் சாதாரண தகவல் தொடர்பை ஊக்குவிக்கின்றன. தினமும் 2 முட்டை உட்கொள்வதால் இந்த ஊட்டச்சத்து உடலுக்கு போதிய அளவில் கிடைக்கிறது. இந்த கோலின் வைட்டமின் குறைபாடால் ஞாபக மறதி மற்றும் கவனக் குறைவு ஏற்படலாம்.

வைட்டமின் டி, கால்சியம்

வைட்டமின் டி, கால்சியம்

ஒரு வேக வைத்த முட்டை அல்லது மீன் எண்ணெய் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ள அதிகம் விரும்புவீர்கள் ? நிச்சயமாக பலர் வேக வைத்த முட்டையைத் தான் அதிகம் விரும்புவர். முட்டையில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் உடல் கல்சியத்தை அதிகம் உறிஞ்ச முடிகிறது. எலும்புகளும் பற்களும் வலிமை அடைகின்றன. கல்சியம் உறிஞ்சுவதில் வைட்டமின் டி எப்படி உதவுகிறது ? வைட்டமின் டி குடல் கால்சியத்தை உறிஞ்சுதலுக்கு உதவுகிறது மற்றும் பாஸ்பேட் மற்றும் மக்னீசியம் அயனிகளின் உறிஞ்சுதலை தூண்டுகிறது.

கண்பார்வை அதிகரிக்க

கண்பார்வை அதிகரிக்க

புதிய ஆராய்ச்சிகள் லுடீன் என்ற பொருள் கோழி முட்டையில் அதிகமாக இருப்பதோடு, இந்த பொருள் தெளிவான மற்றும் கூர்மையான கண்பார்வைக்கு காரணம் என்று கூறுகின்றது. லுடீன் ஒரு கரோட்டினாய்டு வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது, இது கண்புரை மற்றும் வயது தொடர்பான கருவிழி சீர்கேடு உள்ளிட்ட கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது. லுடீன் குறைபாடு ஏற்படுவதால் கண் திசுக்களில் அழிவு ஏற்படலாம் மற்றும் கண்பார்வை மோசமடையலாம்.

இதய நோய்

இதய நோய்

முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் , பாஸ்படிடுகளால் சமநிலை பெறுகிறது. இதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கு ஏற்படுவதில்லை. இதனால் உடலின் கொழுப்பு உற்பத்தியும் நிறுத்தப்படுகிறது. முட்டைகள் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகின்றன, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

காலை உணவில் குறைந்த கலோரி உணவுடன் முட்டையை இணைத்துக் கொள்வதால் உங்கள் எடை வேகமாக குறைகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை உணவுகள் உங்கள் வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசியின்மையை கொடுத்து அதிக உணவு உண்ணுவதை தவிர்க்கிறது.

சரும அழகு

சரும அழகு

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவதால் உங்கள் சருமம் அழகும் பளபளப்பும் பெறுகிறது. முட்டையில் உள்ள பயோட்டின், வைட்டமின் பி 12, மற்றும் செரிமான ஊட்டச்சத்து புரதங்கள் ஆகியவை முடி மற்றும் தோல் வலுவூட்டுவதற்கு பங்களிக்கிறது. முட்டையில் உள்ள பாஸ்போலிபிட் கல்லீரலில் உள்ள நச்சுகளை அகற்ற ஊக்குவிக்கப்படுகின்றன.

புற்றுநோய்

புற்றுநோய்

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது. தினமும் இரண்டு முட்டையை தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் உண்டாகும் அபாயம் 18% குறைவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. முட்டையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து கோலின், மார்பக புற்று நோயை 24% வரை குறைப்பதாக கூறுவதே இதன் காரணமாகும்.

கருவுறுதல்

கருவுறுதல்

முட்டைகளில் காணப்படும் பி வைட்டமின்கள் பாலின ஹார்மோன்களை உருவாக்க உதவுகின்றன. வைட்டமின் B9 என்றும் அறியப்படும் ஃபோலிக் அமிலம், சிவப்பு அணுக்களின் உருவாக்கம் மற்றும் கருவின் நரம்பு குழாய் உருவாக உதவுகிறது. இது குழந்தைகளுக்கு மன நல பாதிப்பு கோளாறு ஏற்படுவதை குறைக்கிறது. அதனால் , பெண்கள் கருவுற திட்டமிடும்போது அதிக முட்டை சாப்பிடுவது அவசியமாகும். ஒரு கோழி முட்டையில் 7 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் 9 உள்ளது.

இப்போது உங்களுக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டதா?… இனி கவலைப்படாமல் முட்டை சாப்பிடுங்கள். முட்டை உங்களுடைய ஆரோக்கியத்தில் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி