அழகு குறிப்பு

ஒரே ஸ்பூன் தயிரும் இந்த பொடியும் கலந்து முகத்துல தேய்ங்க… அப்புறம் உங்க ஊர்லயே நீங்கதான் பேரழகு…

சரும பராமரிப்பு

முகத்தில் அரிப்பு ஏற்பட்டால் தோல் வறண்டு போய்விட்டது என்று அறிந்து கொள்ளலாம். அரிக்கிறது என்று சொறிந்து கொண்டே இருந்தால் முகத்தின் தோல் தடிமனாவதுடன் நிறமும் கறுத்து விடும். மாய்ஸ்சர்ஸ் என்னும் முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் பூச்சுகள் மட்டும் முகத்தை பராமரிக்க போதுமானவை அல்ல. மிருதுவானதாக, மிளிரக்கூடியதாக உங்கள் முகத்தை பராமரிக்க நீங்கள் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சூப்பர் மார்க்கெட்களில், ஆன்லைனில் வேதிப்பொருள்கள் அடங்கிய கண்ட கண்ட ஃபேஸ்பேக்குகளை வாங்கி பணத்தை செலவழிப்பதோடு, முகத்தின் அழகையும் கெடுத்துக்கொள்ளாமல், வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக முக அழகினை பேண முடியும்.

சந்தனம்

சந்தனம்

சந்தன சோப், சந்தன வாசனை திரவியம், சந்தன பத்தி என்று அநேக பொருட்களை பார்க்கிறோம்; உபயோகிக்கிறோம். சந்தனம் வாசனையுள்ளது; பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியது. முகத்தின் வறட்சியை மாற்றி குளுமை அளிக்கக்கூடியது சந்தனம். முகத்தில் ஏற்படக்கூடிய சிறுகட்டிகள் போன்றவற்றை குணமாக்கி, முகத்திற்கு நல்ல பொலிவையும் சந்தனம் கொடுக்கும்.

முகத்தின் சருமத்திற்கு தேவையான நல்ல ஊட்டத்தை கொடுக்கக்கூடிய நலம் பயக்கும் பாக்டீரியாக்கள் தயிரில் உள்ளன. தயிரில் காணப்படும் புரோட்டீன், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துகள் உங்கள் நிறத்தை மேம்படுத்தும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதோடு, தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கும்.

நன்மை பயக்கும் சந்தனத்தையும், தயிரையும் தேனுடன் கலந்து வறண்டு வெளிறிப்போன முகத்தின் மீது தடவி வர, முகம் பொலிவானதாக மாறும்.

சந்தனப் பொடி:

சந்தனப் பொடி:

சந்தனப் பொடி முகத்தின் தோலை தளரச் செய்து, ஈரப்பதத்தை பேணி, முகத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. தோலில் ஏற்படும் வெடிப்புகளை ஆற்றுகிறது. தோல் வறளும்போது சுருக்கம் தென்படுகிறது. தோலில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போது சுருக்கம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறியதாகி விடும். சந்தனப் பொடி, தோலின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது. சுருக்கங்கள் மறைவதால், வயதானதுபோன்ற தோற்றம் மாறி, முகம் இளமையாக தோன்றுகிறது. முகத்தில் ஏற்படும் தொற்று மற்றும் அரிப்பினை சந்தனம் தடுக்கிறது. புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்ற மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்துக்கு உண்டு.

தயிர்:

தயிர்:

தயிரிலுள்ள பால் புரதங்கள் தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை அளிக்கின்றன. தோலை மென்மையாக்கி, மிளிரச் செய்வதும் தயிரின் பண்பாகும். தயிரிலுள்ள லாக்டிக் அமிலம், புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது. ஆகவே, முகம் எப்போதும் புதுபொலிவுடன் காணப்படும். தயிர் நல்ல சுத்திகரிப்பான். சருமத்திலுள்ள சிறு துளைகளை அது சுத்தமாக்குகிறது. ஆகவே, அழுக்கு நீங்கி முகம் பிரகாசமடைகிறது. வயதான தோற்றத்தை தடுக்கும் பண்பும் தயிருக்கு உண்டு. முகத்தின் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும் தயிர் அளிக்கிறது. இதிலுள்ள பல்வேறு தாதுக்கள் சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கிறது.

தேன்:

தேன்:

தேன், காற்றிலுள்ள ஈரப்பதத்தை பிரித்து முகத்திற்கு அளித்து, போதிய நீர்ச்சத்து சருமத்திற்கு கிடைக்க வழி செய்கிறது.

சந்தனமும் தயிரும் கலந்த ஃபேஸ்பேக்

சந்தனமும் தயிரும் கலந்த ஃபேஸ்பேக்

ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி, ஒரு டீஸ்பூன் அளவு தயிர், அரை டீஸ்பூன் அளவு தேன் இவற்றை கிறு கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். பசை போன்று காணப்படும் இந்த ஃபேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரைக்கும் அப்படியே விட்டு வைத்து, சாதாரண நீரைக் கொண்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நீங்கள் இதை உபயோகித்தால், முகம் ஆரோக்கியமாக இருக்கும். கெமிக்கலை புறக்கணிப்போம்; இயற்கையாக முகத்தை பேணுவோம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி