சீரியல் ஸ்பெசல்

ஓவியா வந்தாச்சேய்… – செல்ஃபி எடுத்து மகிழும் ஹவுஸ்மேட்ஸ் #BiggbossGrandFinale

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் செயல்களைப் பற்றி விவரிக்கும் ஒரு புதிய பாடலுக்கு கொரியோகிராஃபர் சாண்டி நடனமாடினார்.

தொடக்கம் முதலே சின்னத்திரையில் அதிகம் பிரபலமான இந்த நிகழ்ச்சியை இதுவரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களில் 85% பேர் பார்த்துள்ளதாக கமல் கூறியுள்ளார். 6.5 கோடி ரசிகர்கள் என்பது சாதாரண விஷயமல்ல என கமல் பெருமையுடன் கூறினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த எல்லா போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது எலியும் பூனையுமாக இருந்த பலரும் இப்போது நண்பர்களாகப் பேசி வருகின்றனர்.

ஓவியாவும் ஜூலியும் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். சினேகனைப் பார்த்து ஓவியா ஏன் எப்போதும் அழுதுட்டே இருக்கீங்க. உங்க மோட்டார்ல மட்டும் எப்படி தண்ணி வந்துக்கிட்டே இருக்கு’ எனக் கேட்டார்.

எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கஞ்சா கருப்பு உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு நடனமாடினர்.

English summary

The grand finale show of the biggboss show is currently airing. All of the outgoing contestants, including Oviya, were present on the final day.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி