உலக செய்தி

கட்டளையை மீறிய விமானி! – 49 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்து #NepalPlaneCrash

பங்களாதேஷ் விமானம், நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பங்களாதேஷ் தனியார் விமானம் நேற்று பிற்பகல் நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையை விட்டுச் விலகிச் சென்று, ஓர் இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்த வேகத்தில் உடனேயே பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதைக்கண்ட விமான நிலைய மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் மிக வேகமாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விமானத்தில், விமானப் பணியாளர்கள் உட்பட 71 பயணிகள் பயணித்துள்ளனர். இதில் நேபாளத்தைச் சேர்ந்த 33 பேர், பங்களாதேஷைச் சேர்ந்த 32 பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த ஒருவரும் பயணம் செய்துள்ளனர்.

நேபாள விமான விபத்து

இது குறித்து பேசிய அந்நாட்டு அதிகாரிகள், விமானத்தில் பயணம் செய்த 71 பேரில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர். விமானம் விழுந்த உடன் தீ பற்றியதே அதிகமானவர்களின் உயிரிழப்பிற்குக் காரணம், விமானத்தை வெட்டித் திறந்து பயணிகளை வெளியே எடுக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டனர்.  மேலும் விமானத்தை தென் பகுதியில் தரையிறக்கச் சொல்லியே விமான ஓட்டிக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால், விமானம் வடக்குப் பகுதியில் தரையிறக்கப்பட்டது. எதற்காக இவ்வாறு தரையிறக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். சமீபத்தில் நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்ற கேபி.சர்மா ஓலி விபத்து நடந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி