அழகு குறிப்பு

கண்களில் சொட்டு மருந்துக்கு பதிலாக ரோஸ்வாட்டரை விடலாமா?…

அழற்சி

கண்களில் ஏற்படும் அழற்சிக்கு பல காரணங்கள் உள்ளன. கண்கள் உலர்ந்து போவது அவற்றில் ஒன்று. இந்த பிரச்சனைக்காக வீணாய் சிறப்பு நிபுணரை தேடி அலைந்து உங்கள் நேரத்தை தொலைக்கும் முன் வீட்டிலிருந்தபடியே இப்பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றால் அதனை முயற்சிக்கலாமே.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

ஒரு பஞ்சை சிறிது பன்னீரில் நனைத்து கண்கள் மற்றும் கண் இமைகளில் ஒற்றி எடுக்கவும். அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக ஒத்தடம் கொடுக்கவும். சிறந்த பயனை பெற ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை மீண்டும் செய்யவும்.

சோர்வை குறைக்கும்

சோர்வை குறைக்கும்

அதிகமான வேலை பளு இருக்கும்போது, சில சமயங்களில் கண் இமைகள் தன்னிச்சையாக துடிக்கும். நன்கு தூங்கி எழுந்தால் இது சரி ஆகி விடும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இதனை சரி செய்ய கீழ்கண்ட முறையை பின்பன்றுவது சிறந்த பலனைத் தரும்.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்த அல்லது வடிகட்டிய சுத்தமான தண்ணீர் உபயோகிப்பது நல்லது. இதனுடன் ஒரு தேக்கரண்டி பன்னீர் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையைக் கொண்டு கண்களை நன்கு அலசவும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இவ்வாறு கண்களை அலசவும்.

கிருமி நாசினி

கிருமி நாசினி

மகரந்தம், தூசு போன்றவை பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். நவீன உலகில் எப்போதுமே இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது என்பது கடினமே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் கண்களை பாதுகாத்துக்கொள்ள பன்னீர் சிறந்த தேர்வு.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

ஒரு கிண்ணத்தில் பன்னீரை எடுத்துக்கொள்ளவும். சிறுது பஞ்சை அதில் நனைத்து, கண்களின் மேல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்துக்கொள்ளவும். பிறகு பஞ்சை நீக்கி விட்டு முகம் கழுவவும். இதை செய்யும்போது மாற்றத்தை உடனே காணலாம். ஒவ்வாமை ஏற்படாமல் நம் கண்களை தற்காத்துக் கொள்ளவும் இதை செய்யலாம்.

கண் கருவளையம்

கண் கருவளையம்

இந்த நவீனமயமான உலகில், நம் கனவுகளை நனவாக்க பல முறை தூக்கத்தை தியாகம் செய்ய நேரிடுகிறது. இதனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பன்னீர் இருக்கும்போது கவலை வேண்டாம்.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

ஒரு பஞ்சில் சிறுது பன்னீரையும் குளிர்ந்த பாலையும் தெளித்துக்கொள்ளவும். இவ்வாறு செய்யும்போது பாலும் பன்னீரும் சம அளவில் இருக்க வேண்டும். கண்ணனுக்கு மேல் இந்த பஞ்சை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். இவ்வாறு இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்றாவது வாரத்தில் இருந்தே கருவளையம் குறைய ஆரம்பித்திருப்பதை உணரலாம்.

கண் வலி

கண் வலி

கண் எரிச்சல் தரும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் சொட்டு மருந்து உபயோகிப்பது கண் எரிச்சலை குறைப்பது மட்டுமின்றி கண்கள் உலர்ந்து போவதையும் தடுத்து, கண்களில் இருக்கும் அழுக்கையும் நீக்குகிறது.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

வசதியாக படுத்துக்கொண்டு கண்களில் 2 அல்லது 3 சொட்டுகள் பன்னீர் விடவும். தானாக செய்வதை விட இன்னொருவரின் உதவியை எடுத்துக்கொள்ளலாம். அடுத்த 10 முதல் 20 நிமிடங்கள் வரை இளைப்பாறவும். தினமும் ஓரிரு முறை இதை செய்யும்போது சிறந்த பலன் கிடைக்கிறது.

உலர்ந்து போதல்

உலர்ந்து போதல்

காஜல், மஸ்காரா, ஐ லைனர், கண் மை போன்றவை கண்களை உலர்ந்து போக வைக்கின்றன. இவற்றை நீக்க நாம் பயன்படுத்தும் மேக்கப் ரிமூவர்களும் செயற்கையானவையே என்பதால் கண்களுக்கு இன்னும் தீங்கு விளைவிக்கும்.

கண்களுக்கு மேக்கப் போட்டுக்கொள்வதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம் கண்களை பாதுகாக்க பன்னீரை ரிமூவராக பயன்படுத்தலாம். இது கண்களில் போட்ட மேக்கப்பை நன்கு நீக்குவது மட்டுமில்லாமல் கண்களுக்கு ஈரபதத்தையும் தந்து கண்கள் உலர்ந்து போகாமல் காக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி