அழகு குறிப்பு

கண்ணிமைக்கு மேல இப்படி வெள்ளை வெள்ளையா இருக்கா?… அது என்னன்னு தெரியுமா?

கண் புருவத்தில் பொடுகு

கண் புருவம் மற்றும் கண்ணிமை முடிகள் வறண்டு போய் பொடுகுடன் காணப்படும். இதனால் கண்ணிமைகளில் அரிப்பு, எரிச்சல் மற்றும் உருத்தல் போன்றவை ஏற்படுமாம். இந்த தாக்குதல்கள் கண்களுக்கு அருகில் இருக்கும் சருமத்தையும் பாதிப்படையச் செய்யும்.

ஆனால் நீங்கள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இதற்கு சில எளிய இயற்கை முறைகள் உள்ளன. அதை பின்பற்றினாலே போதும் இந்த கண்ணிமை பொடுகுத் தொல்லைக்கு பை பை சொல்லி விடலாம்.

குறிப்பு

குறிப்பு

கீழ்கண்ட வீட்டு முறைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் கை சருமத்தில் சிறிதளவு அப்ளே செய்து ஒத்துக் கொள்கிறதா என்று பரிசோதனை செய்து பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் கண்கள் மிகவும் மென்மையான பகுதி. எனவே அதற்கு பிறகு கண்களுக்கு பயன்படுத்துங்கள்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

சில சமயங்களில் இறந்த செல்கள் கூட பொடுகை உண்டாக்கும். எனவே இதற்கு பாதாம் எண்ணெய் சிறந்தது. பாதாம் எண்ணெய் கண்களை சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் பாதாம் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும். இப்பொழுது இதை உங்கள் கண்ணிமைகளில் தடவி அப்படியே மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை அப்படியே இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்து வந்தால் உங்கள் கண்ணிமைகள் ஆரோக்கியமாக இருப்பதோடு புத்துயிர் பெறும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

கண்ணிமைகளில் ஏற்படும் வறட்சியை போக்கி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுப்பதோடு கண்ணிமை முடிகளின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

ஒரு சுத்தமான துணி

பயன்படுத்தும் முறை

இந்த ஆலிவ் ஆயிலை லேசாக சூடு செய்து கண்ணிமைகளில் தடவி மசாஜ் செய்யவும். பிறகு ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதை கண்களின் மேல் 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இன்னும் எண்ணெய் பசை இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவி விடுங்கள். இதை தினசரி செய்து வந்தால் பொடுகு நீங்கி விடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கண்ணிமைகளில் ஏற்படும் பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சை தொற்றை போக்க இந்த கற்றாழை ஜெல் பயன்படுகிறது. மேலும் கண்ணிமைகளில் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல்

காட்டன் பஞ்சு

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படியே ஜெல்லை கண்களில் அப்ளே செய்ய வேண்டாம். ஒரு காட்டன் பஞ்சில் இந்த கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் இமைகளில் தடவி விடுங்கள்

5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தினசரி ஒரு முறை என செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி உங்கள் கண்ணிமைகள் ஆரோக்கியமாக மாறும்.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் கண்ணிமைகளில் ஏற்படும் பூஞ்சை தொற்றை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

லெமன் ஜூஸ்

தண்ணீர்

காட்டன் பஞ்சு

பயன்படுத்தும் முறை

1/4 கப் தண்ணீருடன் சில துளிகள் லெமன் ஜூஸை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்பொழுது காட்டன் பஞ்சை அதில் நனைத்து கண்ணிமைகளில் தடவுங்கள்.

5 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

தினமும் ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

உங்கள் வறண்ட கண்ணிமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் சிறந்தது. அதே நேரத்தில் இது கண்ணிமைகளுக்கு நல்ல ஈரப்பதத்தையும் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

பெட்ரோலியம் ஜெல்லி

பயன்படுத்தும் முறை

இதை இரவில் கண்ணிமைகளின் மேல் தடவி மெதுவாக மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விட வேண்டும்.

காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்

இதை இரவில் தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு

உப்பு

உப்பு உங்கள் கண்ணிமைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க உதவும்.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் உப்பு

தண்ணீர்

பயன்படுத்தும் முறை

1/4 கப் தண்ணீரை ஒரு பெளலில் எடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்பொழுது ஒரு காட்டன் பஞ்சை அதில் நனைத்து அதைக் கொண்டு கண்ணிமைகளில் தடவிக் கொள்ளவும்

10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

இதை தினமும் செய்து வந்தால் உங்கள் கண்ணிமை பொடுகை போக்கிடலாம்.

என்னங்க இனி இதை ப்லோ பண்ணுங்க இனி உங்கள் கண்கள் மட்டுமல்ல உங்கள் கண்ணிமைகள் கூட அழகாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி