அழகு குறிப்பு

கறிவேப்பிலை – எண்ணெய், டானிக் ரெண்டும் ஒன்னா?… இத எப்படி வீட்லயே தயாரிக்கலாம்?…

கறிவேப்பிலை

கறிவேப்பிலை எண்ணெய் மற்றும் இதை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்படும், பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் வராது.

எனவே நீங்கள் ஆரோக்கியமான கூந்தலை பெற இந்த கறிவேப்பிலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பயன்கள்

பயன்கள்

இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது தலையை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, இறந்த மயிர்கால்களை நீக்கி புத்துயிர் கொடுக்கிறது.

இதில் நிறைய அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நமது முடிக் கால்களை வலுவாக்குகிறது. கூந்தல் உடைந்து போவதை தடுத்து ஆரோக்கியமான பளபளக்கும் கூந்தலை தருகிறது.

கூந்தல் அடர்த்தி

கூந்தல் அடர்த்தி

இதில் நிறைய புரோட்டீன் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் உள்ளன. இதனால் கூந்தல் உதிர்தல் தடுக்கப்பட்டு கூந்தல் அடர்த்தியாகுகிறது.

இளநரை போக்க

இளநரை போக்க

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்க்கும் போது நல்ல கன்டிஷனராக செயல்படுகிறது. எனவே சீக்கிரம் முடி வெள்ளையாகுவதை தடுக்கிறது.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

அதிக கெமிக்கல் பொருட்கள், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் உங்கள் கூந்தல் பாதிப்படையும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.

இதில் இரும்புச் சத்து, கால்சியம், விட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை உங்கள் கூந்தலை வலிமையடையச் செய்யும். இதிலுள்ள விட்டமின் பி6 ஹார்மோன் சமநிலைக் காரணி மாதிரி செயல்பட்டு முடி உதிர்தலை தடுத்து நீண்ட அழகிய கூந்தலை அலை பாயச் செய்யும்.

கறிவேப்பிலை எண்ணெய்

கறிவேப்பிலை எண்ணெய்

கறிவேப்பிலை எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இது ஒரு ஊட்டச்சத்து டானிக் மாதிரி செயல்பட்டு உங்கள் கூந்தலுக்கு தேவையான போஷாக்கை தருகிறது.

இதை நீங்கள் பிரிட்ஜில் வைத்து கூட நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் ரெம்ப நாள் வைத்து விடாதீர்கள்.

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை

2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

தயாரிக்கும் முறை

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் கறிவேப்பிலையை சேருங்கள்

இப்பொழுது மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறும் வரை சூடுபடுத்தவும்.

அடுப்பை அணைத்து விட்டு குளிர்விக்கவும்

இப்பொழுது இதை வடிகட்டி ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்

பயன்படுத்தும் முறை

உங்கள் விரல்களைக் கொண்டு தலையில் மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

மயிர்க்கால்களில் நன்றாக படும் படி மசாஜ் செய்யவும்.

ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு சாம்பு கொண்டு அலசிடுங்கள்.

அப்ளே செய்யும் முறை

இந்த ஹேர் டானிக் கை இரண்டு அல்லது மூன்று முறை என்று வாரத்திற்கு பயன்படுத்தலாம். ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். நீங்கள் இதைக் கொண்டு மசாஜ் செய்யும் போது மயிர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

வேலை செய்யும் விதம்

தேங்காய் எண்ணெய் ஏற்கனவே கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தேய்க்கும் போது அதிலுள்ள விட்டமின் பி6 கூந்தலை வலிமையாக்குகிறது, கூந்தல் உதிர்தல், கூந்தல் பிளவு போன்றவற்றை தடுக்கிறது.

ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை இலைகள்

ஒரு கைப்பிடியளவு வேப்பிலைகள்

2-3 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

தயாரிக்கும் முறை

கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு கெட்டியான பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இதனுடன் யோகார்ட் சேர்த்து கொள்ளுங்கள்.

நன்றாக கலந்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளுங்கள்

பயன்படுத்தும் முறை

இந்த மாஸ்க்கை தலை மற்றும் கூந்தலில் நன்றாக அப்ளே செய்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்றாக தலை முதல் முடியின் நுனி வரை நன்றாக தடவ வேண்டும்.

15-20 நிமிடங்கள் நன்றாக உலர விடவும்

பிறகு சாம்பு கொண்டு நன்றாக அலச வேண்டும்.

குறிப்பு :யோகார்ட்டிற்கு பதிலாக நீங்கள் 2 டேபிள் ஸ்பூன் பால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

வேலை செய்யும் விதம்

யோகார்ட் ஒரு நல்ல சுத்திகரிப்பான் மாதிரி செயல்படுவதோடு தலைக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். மேலும் பொடுகு, இறந்த செல்களை நீக்கி உங்கள் தலையை மென்மையாகவும் சுத்தமாகவும் வைக்க உதவும். கறிவேப்பிலை உங்கள் முடிக்கு தேவையான போஷாக்கை கொடுத்து கூந்தலை ஆரோக்கியமாக்கும். இள நரையை தடுக்கும். வேப்பிலை பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பொடுகு, அரிப்பு போன்றவற்றை நீக்கும்.

அப்ளே செய்யும் நாட்கள்

வாரத்திற்கு ஒரு முறை என இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் மென்மையான பட்டு போன்ற பளபளக்கும் கூந்தலை பெறலாம்.

ஹேர் டானிக்

ஹேர் டானிக்

கறிவேப்பிலை ஒரு இயற்கையான ஹேர் டானிக் மாதிரி செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை

ஒரு கப் வெதுவெதுப்பான நீர்

தயாரிக்கும் முறை

ஒரு பெளலில் தண்ணீர் மற்றும் 2-3 கறிவேப்பிலை இலைகளை போடுங்கள்.

கறிவேப்பிலை நன்றாக மென்மையாக மாறி நீர் பச்சை நிறம் வரும் வரை காத்திருக்கவும். பிறகு குளிர விடவும்.

பயன்படுத்தும் முறை

குளிர்ந்த பிறகு இந்த ஹேர் டானிக்கை தலையில் மற்றும் கூந்தலில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

10-15 நிமிடங்கள் இதைச் செய்ய வேண்டும்

அப்ளே செய்யும் நாட்கள்

வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் நல்ல ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும்.

நீங்கள் வெளியே கறிவேப்பிலை டானிக், ஆயில் போன்றவற்றை பயன்படுத்தினாலும் உங்கள் உணவிலும் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சீக்கிரம் பலனை அடையலாம். இனி உங்கள் அழகிய கூந்தலும் உரையாடும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி