அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 163 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு சாண்டா பார்பராவில் உள்ள ரோமியோ கன்யோனில் 300 பேர் வரையிலான ஒரு குழு சிக்கியிருப்பதாக கூறப்படுறது. மழை மற்றும் வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் களத்தில் உள்ளனர். மீட்பு பணிக்கு உதவுவதற்காகப் பல விமானங்களை அமெரிக்காவின் கடலோர காவல்படை அனுப்பியுள்ளது.
