சீரியல் ஸ்பெசல்

கலைஞர் டிவியில் தொகுப்பாளினியான ஜூலி… வாய்ப்பு கொடுத்த கலா மாஸ்டர்

சென்னை: ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி கலைஞர் டிவியின் தொகுப்பாளினியாகிவிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பலரும் கேட்ட போது தன்னுடைய விருப்பம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் ஜூலி.

கலா மாஸ்டர் நிகழ்ச்சி

இந்நிலையில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் 6வது சீஸனைத் தொகுத்து வழங்குகிறார் ஜூலி. கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ் வீட்டில் கலாட்டா

பிக்பாஸ் வீட்டில் கலாட்டா

பிக்பாஸ் வீட்டில் அவர் பொய்யாக நடந்து கொண்டதாலும், பொய் பேசியதாலும், பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் முதற்கொண்டு யாருக்கும் அவரைப் பிடிக்கவில்லை.

பொய் பொய்யாய் பேசும் ஜூலி

பொய் பொய்யாய் பேசும் ஜூலி

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவைப் பற்றி ஜூலி சொன்ன ஒரு பொய்யால் அவரை பலரும் வெறுக்க காரணமாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜூலி அளித்த ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணுடன் நான் அடிக்கடி போனில் பேசுவதாக கூறியிருந்தார். இப்போது அதுவும் பொய் என்று சொல்லியிருக்கிறார் ஹரீஸ்.

ஆங்கரிங் ஆசை நிறைவேறியதே

ஆங்கரிங் ஆசை நிறைவேறியதே

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஜூலியை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஜூலி கவலைப்படவில்லை. அவர் ஆசைப்பட்டது போலவே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகிவிட்டார். இனி ஜூலியை கலைஞர் டிவியில் பார்க்கலாம்.

English summary

Big Boss Julie became an anchor in Kalaignar Tv for Odi vilayadu pappa.

Story first published: Tuesday, October 31, 2017, 8:06 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி