இந்தியா

கல்வி உரிமைச் சட்டத்துக்காக 41,343 வழக்குகள் – உலக வங்கி அதிர்ச்சித் தகவல்

கல்வி உரிமைச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த நம் நாட்டில் 41,000 வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


எவ்வளவு பிரபலமான தனியார் பள்ளியாக இருந்தாலும்,  ஏழை எளிய மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடமளிக்க வேண்டும் என்று, அவர்களுக்கான கட்டணத்தை அரசே அப்பள்ளிகளுக்கு செலுத்திவிடும் வகையில் 2010-ம் ஆண்டில் மத்திய அரசால்  நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம். ஏழை மாணவர்களைத் தங்கள் பள்ளியில் சேர்த்தால், வசதியான மாணவர்களுடன் சமமாகிவிடுவார்களே, போலியான தங்கள் பள்ளியின் கௌரவம் போய்விடுமே, 25 சதவிகித மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வாங்க முடியாதே என்று அஞ்சிய தனியார் பள்ளிகள், இச்சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.

பல நகரங்களிலும் பெரும் போராட்டம் நடத்தித்தான் ஓரளவு  மக்கள், தங்கள் பிள்ளைகளை இச்சட்டத்தின் அடிப்படையில் சேர்த்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பல பெற்றோர்கள், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சம்பந்தமாக இதுவரை நம் நாட்டு நீதிமன்றங்களில் மொத்தம் 41,343 வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 2,477 வழக்குகள் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

”அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி, இவ்வளவு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருப்பதை என்னவென்று சொல்வது? இதை உலக வங்கி சுட்டிக்காட்டும் அளவுக்குக் கொண்டுசென்ற அரசுகளை என்ன சொல்வது?” என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி