இலங்கை

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய கூட்டம் மாத்தறையில்!

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகமானது அதன் அடுத்த பிராந்திய கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாத்தறையில் நடாத்தவுள்ளது.

கடந்த 12ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற கூட்டமொன்றுடன் தனது நிகழ்ச்சித்திட்டதை ஆரம்பித்த இந்த அலுவலகம் அதன் அடுத்த கூட்டத்தை மாத்தறையில் நடத்தவுள்ளதாக காணமால் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த  அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் நிறுவனத்திட்டம் மூலோபாயங்களை பகிந்து கொள்வதற்காகவும் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காவும் , காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் குடுத்பத்தினர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட விடயங்களுடன் செயற்படும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரை சந்திப்பார்கள் .

இந்த கூட்டம் மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் முதலாவதாக முற்பகல் 9.30 மணிக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதுடன், அதனை தொடந்து முற்பகல் 11.30 மணிக்கு காணாமலாக்கபபட்ட விடயங்களுடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களையும், பிற்பகல் 12.30 மணிக்கு ஊடகத்துறையினரையும் சந்திக்கவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி