இலங்கை

காரை மோதிய லொறி: ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் பாரிய வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தவிபத்திர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி என்பன மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் லொறி வாகன சாரதி தூக்க நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 35 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி