இலங்கை

கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம் ஜனாதிபதி தலைமையில்

வடமேல் மாகாணத்திற்கான கிராம சக்தி மக்கள் இயக்கம் என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு தேசிய செயற்க்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை மதுரங்குளியில் நடை பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், புத்தளம் குருணாகல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற அபிவிருத்தித்திட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தின் போது வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீராக நோய் மற்றும் அதற்கான தீர்வு, புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு, காட்டு யானைத் தொல்லை, தென்னை மரங்கள் அழிப்பு, புத்தளத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் மற்றும் கல்பிட்டி பிரதேசத்திற்கான குடிநீர் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதுமட்டுமன்றி இதன் போது இரு மாவட்டங்களின் அபிவிருத்திக்கான நிதியையும் ஜனாதிபதி வழங்கியிருந்ததுடன், இரு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இதன் போது வடமேல் மாகாணத்தைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் புத்தளம் மாவட்ட செயலாளர், குருணாகல் மாவட்ட மேலதிக செயலாளர், அரச அதிகாரிகள், வடமேல் மாகாண ஆளுநர், வடமேல் மாகாண முதலமைச்சர், ரவூப் ஹக்கிம் எஸ்.பி நாவின்ன இராஜங்க அமைச்சர்களான பாலித ரங்கே பணடார, நிரோஷன் பெரேரா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி