சீரியல் ஸ்பெசல்

'கிராமமா அது எப்படி இருக்கும்..' – காசுக்காக விவசாயம் பார்க்கும் நடிகை!

கிராமத்து பிக்பாஸ் – வில்லா டு வில்லேஜ்!- வீடியோ

சென்னை : விஜய் டிவி-யில் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் ‘வில்லா டு வில்லேஜ்’ நிகழ்ச்சியில், சனம் ஷெட்டி ஒருவர் மட்டும் தான் சினிமா நடிகை. அவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே மாடல் அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது அதே போன்று மற்றொரு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறது. சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் மொத்தம் 12 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Sanam shetty the only actress participates in Villa to village show

ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வேலை செய்து அன்றாட வருமானத்தைக் கொண்டு வாழ வேண்டும். இதில் கலந்து கொள்ளும் 12 மாடல் அழகிகளில் சனம் ஷெட்டியும் ஒருவர். ஆனால், இவர் மட்டும் தான் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் இருந்தே, கிராமம் என்றால், எப்படியிருக்கும் என்று கூட சனம் ஷெட்டி பார்த்தது இல்லையாம். அப்படியிருக்கும் போது, இதனை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தமிழில் ‘அம்புலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இப்படத்தைத் தொடர்ந்து ‘கதம் கதம்’, ‘சதுரன் 2’, ‘சவாரி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கிராமத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத சனம் ஷெட்டி, 45 நாட்கள் கிராமத்தில் இருந்து எப்படி தாக்குப் பிடிப்பார் எனத் தெரியவில்லை. ஆனால். 12 போட்டியாளர்களும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி