ஆரோக்யம்

கீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க!

காரணம் :

கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேர பிற காரணங்களை விட முக்கியமாக கூறப்படுவது உங்களுடைய வாழ்க்கை முறை. அதிலும் அதிக கொழுப்புள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பவருக்கு கீழ் வயிற்றில் கொழுப்பு அதிகமாக சேரும்.

சிலருக்கு மரபணு காரணமாகவும் கீழ் வயிற்றில் அதிக கொழுப்பு சேருவதுண்டு.மற்ற பாகங்களுக்கு நீங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட மிக கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே கீழ் வயிற்று கொழுப்பினை கரைக்க முடியும்.

கலோரி :

கலோரி :

இனிவருகின்ற விஷயங்களை கண்டிப்பான முறையில் கடைபிடித்திடுங்கள். கீழ் வயிற்று தசையை குறைக்க முதலில் உணவுப்பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை பொருட்களை முடிந்தளவு தவிர்த்திடுங்கள். கலோரி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

உடல் எடைக்கும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது உங்கள் உடலில் கொரிஸ்டால் என்ற பொருள் சுரக்கும். இது சுரப்பதினால் அதிகப்படியான கொழுப்பு அடிவயிற்றில் சேர்ந்திடும்.

அதைத் தவிர ஆரோக்கியமான டயட் அவசியம்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீ அவசியம் குடிக்க வேண்டும். இதில் கேட்சின் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவிடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு கப் க்ரீன் டீ குடிக்க வேண்டும்.

காபி டீ குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் டீ குடிக்க வேண்டும்.

கார்டியோ :

கார்டியோ :

சரியான நேர இடைவேளியில் ட்ரைனிங் வேண்டும். கீழ் வயிறு குறைக்க கார்டியோ பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும் இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக வயிற்றுக் கொழுப்பும் கரைக்கப்படும்.

டயட் :

டயட் :

டயட் என்ற பேரைச் சொன்னதுமே…. எல்லாரும் மிக பிரம்மாண்டமாக அல்லது அதற்கு நாம் நிறைய சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல நினைக்கிறார்கள். அவர்களாகவே சப்பாத்தி சாப்பிடலாம், ஓட்ஸ் சாப்பிடலாம், எல்லா பழங்களையும் சாப்பிடலாம் அரிசியை மட்டும் தவிர்த்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் உண்மையில் இது எல்லாமே பொய்…. அரிசி கோதுமை இரண்டிலுமே மாவுச் சத்து தான் இருக்கிறது. அதனால் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று இருக்கவே முடியாது. அதே போல பழங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமன்று அவற்றிலும் சிலவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கலோரி அதிகமிருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது, சதைப்பற்றுள்ள,இனிப்பான பழங்களான மா, பலா, வாழை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கலோரி குறைவான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

தண்ணீர் :

தண்ணீர் :

உங்களால் முடிந்தளவு அதிக தண்ணீரைக் குடித்திடுங்கள். தாகம் எடுத்தால் தானே குடிக்க என்றிருக்காமல் நீங்களாக சிறிது நேரத்திற்கு ஒரு முறையென கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குடித்திடுங்கள்.மொத்தமாக ஒரே நேரத்தில் குடிப்பதை விட இப்படி குடிப்பது தான் நல்லது.

அதிலும் உணவு சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாக தண்ணீரை குடித்துப் பழகுங்கள். இப்படி குடிப்பதினால் உணவினை குறைவாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போல உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து இருப்பதினால் இனிப்புச் சுவை தேவை ஏற்படாது. தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் அதிகப்படியான இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்து கொண்டேயிருக்கும்.

தூக்கம் :

தூக்கம் :

வேலை, பயணம் என்று எந்த காரணத்திற்காகவும் உங்களது தூக்கம் தடைபடக்கூடாது. கீழ் வயிற்று தசை குறைக்க வேண்டும் என்று நினைத்து என்ன பிரயத்தனப்பட்டாலும் சரியான தூக்கம் இல்லையென்றால் அத்தனையும் வீணாகிவிடும்.

போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது உங்கள் உடலின் க்ஹெர்லின் என்ற ஹார்மோன் சுரந்திடும். இது சுரப்பதால் உடலில் சர்க்கரை சுவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி என்பதை விட உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க பழகுங்கள். ஒரேயிடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருக்காதீர்கள். கண்டிப்பாக மதுப்பழக்கத்தினை கைவிட வேண்டும். மதுவில் எம்டி கலோரீஸ் மற்றும் கொழுப்பு தான் அதிகமாக இருக்கிறது. இவற்றை குடித்தால் கீழ் வயிற்று கொழுப்பு அதிகரிக்குமே தவிர குறையாது.

விரதம் :

விரதம் :

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு காலை உணவினை சாப்பிடாமல் தவிர்ப்பது, அல்லது வாரம் முழுக்க அளவுக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொண்டு விட்டு பெயரளவில் ஒரு நாள் முழுக்க விரதம் இருப்பது ஆகியவற்றை எல்லாம் செய்யக்கூடாது.

உடல் எடையை குறைக்க உணவினை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி