கிசு கிசு

குடும்பத்துடன் சீனா போன விஜய் பொங்கலுக்கு ரிட்டர்ன்… நெக்ஸ்ட் ஷூட்டிங்!

மலேஷியா சென்றுள்ள ரஜினிகாந்திற்கு பிரும்மாண்ட வரவேற்பு- வீடியோ

சென்னை : நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில், முன்னணி நடிகர் நடிகைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் என்ட்ரி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட கையோடு மலேசியா சென்றார். ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், அங்கிருந்து நேரடியாக மலேசியாவுக்கு வந்தார்.

Vijay will back to india on Jan 12

நடிகர் விஜய் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வார் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர் மலேசியாவுக்கு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு பதிலாக, ‘விஜய் 62’ படத்தின் போட்டோஷூட்டை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் கிளம்பிய அதே நாளில் குடும்பத்துடன் சீனா சென்றார்.

தற்போது அவர் எப்போது இந்தியா வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. விஜய், வரும் ஜனவரி 12-ம் தேதி சென்னை திரும்புவதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மலேசியாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் விஜய் வருவார் என எதிர்பார்த்து ஏமாந்து போயினர். சீனா சென்றிருக்கும் விஜய் பொங்கல் கொண்டாட தமிழகம் வந்துவிடுவார். அதன்பிறகு, ”விஜய் 62′ பட ஷூட்டிங்கில் பிஸியாகி விடுவார் எனத் தெரிகிறது.

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க subscribe பண்ணுங்க.

English summary

Actor vijay went to China with his family. Vijay is reportedly coming back to Chennai on January 12th. Next up, He get ready for Murugadoss film shooting.

Story first published: Monday, January 8, 2018, 17:44 [IST]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி