இந்தியா

குண்டு பாய்ந்த தூத்துக்குடி இளைஞருக்கு மதுரையில் சிகிச்சை !

தொண்டையில் குண்டு பாய்ந்த நிலையில் தூத்துக்குடி இளைஞருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது .

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைத் தடுக்க, இரண்டு நாள்களாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்ததுடன், 53 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், இணையதள சேவை முடக்கம், தொடர் வன்முறை என 4 நாள்களாகப் பதற்றத்துடன் காணப்பட்ட தூத்துக்குடி, நேற்று முதல் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிவருகிறது. துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்ற 32 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இதுகுறித்து  மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டபோது “ கழுத்தில் வீக்கம் போன்று காணப்பட்டதால் அவர் மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். மிக நலமுடன்தான் அவர் காணப்படுகிறார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் தொண்டைக்கு அருகே உடலுக்குத் தொடர்பில்லாத ஏதோ ஒன்று இருப்பது போன்று காணப்படுகிறது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இன்று மீண்டும் தொடர்புகொண்டு விசாரித்தபோது ராஜலிங்கம் மிகவும் நலமுடன் உள்ளார் பயப்பட ஒன்றும் இல்லை என மருத்துவமனை முதல்வர் நம்மிடம் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி