கலாச்சாரம்

குழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்புவோம்… தொழிற்சாலைக்கு அல்ல


சென்னை: குழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்பி கல்வி கற்க வைப்போம். தொழிற்சாலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்ப்போம் என்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான நாளை உறுதிமொழி ஏற்போம்.

எல்லா குழந்தைகளுக்கும் தங்களது இளமை பருவத்தை முழுமையாக அனுபவிக்க அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. அதிலும் குழந்தை தொழிலாளர்களின் நிலை மிக அவலம். குழந்தை தொழிலாளர்களைத் தடுக்க அரசாங்கம் பல திட்டங்களை பிறப்பித்த போதிலும்.

இன்றும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையானது மிகுந்துக் கொண்டே தான் இருக்கிறது. உலகளவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அபாயக்கரமான வேலைகளில் ஈடுப்படுத்தப் படுகின்றன. குழந்தை தொழிலாளர்கள் தங்களின் பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் பல வடிவில் சுரண்டப்படுக்கின்றனர்.

பிரச்சினைகள் என்ன

14 வயதிற்கு குறைவான குழந்தைகளை வற்புறுத்தி வேலைக்கு அனுப்புதல் நீதிக்குப் புறம்பான செயல். குழந்தைகள் தங்களின் இளமைப் பருவத்தில் அடைய வேண்டிய கல்வியும், வயதிற்கு ஏற்ற வாழ்வையும் அடையவிடாமல் தடுக்கிறது. உடலாலும், மனதாலும், சமூகத்தாலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கியமாக போதுமான உணவு, இட வசதி, வேலைகேற்ற சரியான ஊதியத்தை முதலாளிகளிடமிருந்து பெற முடிவதில்லை. உடல் உழைப்பைத் தரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டசத்து பெறாததால் துவண்டு போகின்றனர்.

சமூகத்தினர் செய வேண்டியவை

சமூகத்தினர் செய வேண்டியவை

உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமானது ஜூன் 12, 2002 ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது. ஐநா சபை மேற்கொண்ட குறிக்கோளானது உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வும், குழந்தை தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனையை சுட்டிக் காட்டவும், குழந்தை தொழிலாளர்களுக்கு வேண்டிய வழிக்காட்டுதலும் அரசாங்கம் வரையறுக்க வேண்டும். அரசின் கீழுள்ள உள்ளூர் அதிகாரிகள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு, நாகரீக சமுதாய மக்களாகிய நாம் அனைவரும் குழந்தை தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.

சஸ்டெனப்பில் வளர்ச்சி திட்டம்

சஸ்டெனப்பில் வளர்ச்சி திட்டம்

சஸ்டெனப்பில் இலக்கானது நிலையான வளர்ச்சியே. இன்றைய தலைமுறையினரின் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. இதில் 12 வகையான இலக்குகளை இந்தியா வளர்ச்சிகாக 2030 உள்ளாகவே அடைய வேண்டியுள்ளது. இதன் கீழ் குழந்தை தொழிலாளர்களை குறிக்கவும், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் அடக்குமுறை போன்றவற்றை நிரந்தரமாக சமூகத்திலிருந்து அகலும் வண்ணமாகவும். இதனால் அனைவருக்கும் எளிதாக நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாய் கொண்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்களாக ஏற்பட முக்கிய காரணங்கள்

குழந்தை தொழிலாளர்களாக ஏற்பட முக்கிய காரணங்கள்

இந்திய வளர்ச்சிக்கு முதல் படியே வறுமையை ஒழித்தல். தாய், தந்தை இழந்த குழந்தைகள், பெற்றோர்களுக்கு வேலையின்மை , விவசாய்களின் தற்கொலை, உயிர் கொள்ளி நோய் போன்ற காரணத்தினால் சமுகத்தில் பல அவலங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமூக பாதுகாப்பின்மை, மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் இக்குழந்தைகளால் பெறமுடியவில்லை. இதனால் இக்குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விடும் நிலை ஏற்படுகிறது. வறுமையால் வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுக்கின்றனர்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏதிரான சட்டம்

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏதிரான சட்டம்

14 வயதிற்கு குறைவான குழந்தைகள் குலத் தொழில் அல்லாது குடும்பத் தொழிலைத் தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். குழந்தை தொழிலாளர் ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதாவானது 2012, ஆம் பிறப்பிக்கப்பட்டப் போது பதினான்கு வயதான குழந்தைகளை வேலையில் ஈடுப்படுத்தும் பெற்றோர்க்கு சிறை தண்டனை வழங்கப் பெறும். பதினாக்கு வயது முதல் பதினெட்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளை அபாயகரமான வேலைகளிலும் ஈடுபடுத்தல் கூடாது.

தீவிர முயற்சி

தீவிர முயற்சி

அரசாங்கம் இக்குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக பல சட்டங்களை ஏற்றியுள்ளது. இருந்தபோதிலும் பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சேவை பன்பான்மையோடு சற்று தீவிரமாக முயற்சி செய்தால் இதனை சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கலாம்.

” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. “

குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி தருதலும். குழந்தைகள் அவ்வாய்ப்பின்னை பயன்படுத்திக் கொள்ளுதலும் மிக சிறந்தது. குழந்தைகளை பாட சாலைக்கு அனுப்புவோம், தொழில்சாலைகளுக்கு அல்ல.

” உதவும் கரம் கொண்டு,

ஊக்கத்தோடு முயற்சிப்போம்.

– ரேவதி, புதுச்சேரி

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி