இலங்கை

கொழும்பு – வனத்துவில்லு விசேட அதிவேக ரயில் பாதை

கொழும்பில் இருந்து புத்தளம் – வனத்துவில்லு வரையில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் பாதைக்கு அமைவாக மாஹோ ரயில் நிலையத்தில் இருந்து ஆனமடுவ ஊடாக நுரைச்சோலை வரையிலான கிளை ரயில் பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான சாத்திய கூற்று அறிக்கைகள் தயாரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு – புத்தளம், ஆனமடுவ – மாஹோ ஊடாக திருகோணமலை வரை அதிவேக ரயில் பாதையை அமைக்கும் நீண்ட காலத்திட்டத்தின் கீழ் இது அமுலாகிறது. இதன் மூலம் ஆனமடுவ உட்பட புறநகர் பிரதேசங்களுக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி