இலங்கை

கோட்டாவால் அமெரிக்க தூதுவரிடம் சிக்கிய மஹிந்த!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் மேற்கொண்ட சீன பயணம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது சங்ரிலா விடுதியில், கடந்த மே 13 ஆம் திகதி நடந்த வியத்மய ஆண்டு விழாவுக்கு முன்னர், கோட்டாபய சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் கடந்த 2014 அம் ஆண்டு இலங்கை வந்த தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலலாளர் நிசா பிஸ்வாலை, கோட்டாபய ராஜபக்ஷ மரியாதையாக நடத்தவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும், இதன் போது அமெரிக்க தூதுவர் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்ற்கும், மகிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி