உலக செய்தி

கோதாவரி ஆற்றில் படகொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் 14 பேர் பலி

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள கோதாவரி ஆற்றில் படகொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 இற்கும் கூடுதலானோர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்படகில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியதனால் படகு கவிழ்ந்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை 17 பேர் எவ்வித பாதிப்புக்களும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஏனையோரை மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி