அழகு குறிப்பு

க்ரீன் டீ குடிச்சா முடி கொட்டுமா?

கடுகுவுடன் :

க்ரீன் டீயில் விட்டமின் சி மற்றும் இ இருக்கிறது இவை கூந்தலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது முடிவு உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்தலாம். முடி அதிகமாக உடைவது, சீக்கிரமே வரண்டு போவது ஆகிய பிரச்சனைகளை தவிர்க்க இது உதவிடும். அரைகப் தண்ணீரில் க்ரீன் டீ பேக் போட்டு ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது கடுகுத் தூள் சேர்த்து தலையின் வேர்கால்களுக்கு படுமாறு தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து மைல்ட் ஷேம்பு போட்டு கழுவிடலாம்.

முட்டையுடன் :

முட்டையுடன் :

இது உறுதித்தன்மையை அதிகரிக்கும். அதோடு தலையில் பூஞ்சான் தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவுகிறது . இதனைப் பயன்படுத்துவதால் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.

அரை கப் க்ரீன் டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் முட்டையை சேர்ந்து நன்றாக கலக்குங்கள். இரண்டும் சேர்ந்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்க வேண்டும். இதை தலை முழுவதும் தடவி இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து பின்னர் கழுவிடலாம்

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

க்ரீன் டீ பேகை பிரித்து உள்ளேயிருக்கும் பவுடரை தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவுள்ள எலுமிச்சை சாறு கலந்து பேஸ்டாக்கி அதை ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.

இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வரண்ட முடி இருக்கிறது என்றால் இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு :

பூண்டு :

முடியுதிர்விலிருந்து தப்பித்து கொள்ள உதவும் முக்கியமான சமையல் பொருட்களில் ஒன்று பூண்டு. இவற்றுடன் க்ரீன் டீ சேர்த்து ஹேர் பேக் போடும் போது. முடியுதிர்வை கட்டுப்படுத்துவதுடன் முடியை சாஃப்ட்டாக்கவும் அடர்த்தியாகவும் வளர்க்க துணை நிற்கும்.

பூண்டை மைய அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் க்ரீன் டீ தூள் மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்டாக்கி ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிடலாம். இதை மாதத்திற்கு இரண்டு முறை செய்தால் போதுமானது.

தேன் :

தேன் :

தேன் உடல் ஆரோக்கியத்திற்கு சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை பல கட்டுரைகளில் படித்து தெரிந்திருப்போம். அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் முடியுதிர்வை தடுகக்கூடியது. பொடுகுப் பிரச்சனை இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம்.

தேனில் க்ரீன் டீ தூளை கலந்து ஹேர்பேக்காக போடுங்கள். வேண்டுமானால் அதில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

கற்றாழை :

கற்றாழை :

பல்வேறு மருத்துவகுணங்களை கொண்டது கற்றாழை. முடியின் வளர்ச்சிக்கு தேவையான மினரல்ஸ்களை வழங்கிடுவதால் இது நீளமான கூந்தல் விரும்பவர்களுக்கு ஒர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

கற்றாழை ஜெல்லுடன் க்ரீன் டீ தயாரித்து அதனை கலந்து தலையில் பூச வேண்டும். வரண்ட முடி கொண்டவர்களுக்கு இது நிறைய தேவைப்படும்.

இதனை தடவி பத்து நிமிடம் வரை தலைக்கு மசாஜ் செய்திட வேண்டும்.

வெந்தயம் :

வெந்தயம் :

இது முடிக்கு வலிமையை மட்டுமல்ல பளபளப்பை கொடுக்கிறது. முதல் நாள் இரவே இரண்டு ஸ்பூன் அளவுள்ள வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்திடவேண்டும். மறுநாள் காலையில் அதனை மைய அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். அரைக்கும் போது ஊரவைத்த தண்ணீரையே பயன்படுத்தவும்.

பின்னர் இதில் க்ரீன் டீ தூள் கலந்து ஹேர்பேக்காக போடலாம். மாதம் ஒரு முறை இதைச் செய்திடலாம்.

பாதாம் :

பாதாம் :

இதையும் முதல் நாள் இரவு ஊரவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் க்ரீன் டீ கலந்து தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

பாதாம் கிடைக்காதவர்கள் பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் உடனடி ரிசல்ட் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை செய்யும் பட்சத்தில் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் :

யாருக்கெல்லாம் :

க்ரீன் டீ தலையில் இருக்கிற செல்களுக்கு எல்லாம் பெரிதும் உதவிடுகிறது. இதைத் தவிர க்ரீன் டீயில் இருக்கக்கூடிய பாலிஃபினால் விட்டமின் இ மற்றும் சி போன்றவை முடியின் நிறத்திற்கும் தன்மைக்கும் துணை நிற்கிறது.

அதிகமான முடியுதிர்வு பிரச்சனை, தலையில் ப்சொரியாசிஸ், நீண்ட நாட்களாக பொடுகுத் தொல்லை கொண்டிருப்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக அமையும்.

என்ன இருக்கிறது :

என்ன இருக்கிறது :

க்ரீன் டீயில் பல முக்கியமான மின்ரல்ஸ் மற்றும் காம்ப்பவுண்ட்ஸ் இருக்கிறது.குறிப்பாக கரோடினாய்ட்ஸ், டேகோப்ஹ்ரோல்ஸ்,ஹிங்க், க்ரோமியம்,அஸ்கோர்பிக் அமிலம்,செலினியம் மற்றும் மக்னீசியம் இருக்கிறது. இவை அனைத்துமே நம் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்.

க்ரீன் டீயில் மிக முக்கியமாக இடம்பெற்றிருப்பது பாலிஃபினால். இவை தலையின் வேர்கால்களுக்கு வலுவூட்ட பயன்படுகிறது. இவை எல்லாவற்றை தாண்டி தவறான உணவுப்பழக்கம் மற்றும் ஸ்ட்ரஸ் இருப்பவர்களுக்கு அதிகமாக முடி உதிரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது அவசியம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி