இலங்கை

சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிந்தவிற்கு ஆதரவு

சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்திற்கு வருகை தந்த அவர், தனது ஆதரவினை இதன்போது வெளிப்படுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இந்த உலகத்திலேயே ஊழல் மிக்க நாடாக நல்லாட்சி அரசாங்கம் விளங்குகின்றது. நாங்கள் நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும், இந்த பயங்கரமான நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். இவர்களை ஆட்சியிலிருந்து நீக்க நாங்கள் ஒன்றிணைய வேண்டும்” என கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி