அழகு குறிப்பு

சருமத்தில் இந்த நிறமாற்றம் யாருக்கு அதிகம் ஏற்படும் தெரியுமா?

#1

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது சருமத்தில் நிற மாற்றங்கள், கழுத்தில் டார்க் பேட்சஸ் ஏற்படும். இவை ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு மாதிரியான டேன் போல சிலருக்கு கருப்பாகவும் சிலருக்கு பிரவுன் நிறத்திலும் இருக்கும்.

இதனை பார்ப்பவர்கள் எல்லாம் டேன் ஏற்பட்டது என்று நினைத்துக் கொள்வார்கள்.

#2

#2

இவை சருமத்தின் நிறத்தில் மட்டுமே மாற்றம் தெரியும். மற்றபடி பரு, அல்லது அடையாளம் ஆகியவை எதுவும் இருக்காது. ஆங்காங்கே திட்டு திட்டாக உங்களது சாதரண சருமத்திற்கும் அதற்கும் மாற்றம் தெரியும். பெரும்பாலும் இவை வட்ட வடிவில் இருக்கும். இரண்டாம் ட்ரைம்ஸ்டரின் போது இந்த ப்ரெக்னென்சி பிக்மென்டேசன் ஆரம்பிக்கும்.

டெலிவரி முடிந்ததும் தானாக குறைந்திடும். சிலருக்கு மாதக்கணக்கில் ஆகலாம்,அல்லது வருடக் கணக்கில் கூட ஆகலாம். சில பெண்களுக்கு அது அப்படியே நிரந்தரமாக இருந்துவிடுவதும் உண்டு.

#3

#3

இதனை மருத்துவ முறையில் சொல்ல வேண்டும் என்றால் மெலாஸ்மா என்பார்கள். இந்த பிக்மென்டேசன் நெற்றி, மேல் உதடு, தாடைப் பகுதிகளில் தான் அதிகம் ஏற்படும். இதற்கு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது.

வெளியில் செல்லும் போதெல்லாம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள் இத சருமத்தை பாதுகாப்பதுடன் பிக்மென்ட் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

Image Courtesy

#4

#4

இதில் ஒன்று தான் பட்டர்ஃப்ளை மாஸ்க். அதாவது கண்களுக்கு கீழே இரண்டு கண்ணங்கள் மற்றும் மூக்கு ஆகிய பகுதிகளில் நிறமாற்றம் ஏற்படுவதைத் தான் இவர்கள் பட்டர்ஃப்ளை என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பாதிப்பு அதிகமாக டார்க் நிற சரும நிறம் கொண்டவர்களுக்குத் தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Image Courtesy

#5

#5

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். ஆண்களில் அதிகளவு மதுப்பழக்கம், போதை மருந்து பயன்படுத்துகிறவர்கள், தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இப்படியான சருமப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

#6

#6

ஹார்மோன் மாற்றங்களினால் மட்டுமல்லாது அன்றாடம் நீங்கள் செய்கிற சில விஷயங்களினால் அவை இன்னும் அதிகரிக்கச் செய்திடும் என்பதை மறக்க வேண்டாம்.

பிக்மென்டேசன் அதிகரிக்காமல் தவிர்க்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ்

#7

#7

சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் இருக்கிற மெலனோசைட்ஸினை வேகமாக சுரக்க வைக்கும். இவை தான் பிக்மென்ட் உருவாக காரணமாய் இருக்கிறது. அதனால் அதிக நேரம் வெயில் அலைவதை தவிர்க்கவும். மெலனின் நம் சருமத்தில் புற ஊதாக்கதிர்களை தாக்காமல் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது.

மெலனின் இயற்கையாக வெளியில் இருக்கிற வெப்பத்தை உறிந்து கொள்ளும். இதன் மூலம் அதிக வெப்பத்தினால் நம் செல்கள், டிஎன்ஏ ஆகியவை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

#8

#8

வீக்கம் ஏற்பட்டால் இது போன்ற பிக்மென்ட் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு முகப்பரு ஏற்பட்டால் அது அப்படியே அடையாளமாக மாறிடும்.

ஆரம்பத்தில் பரு லேசான வீக்கத்துடன் ஆரம்பித்து பின் அப்படியே சருமத்தில் தங்கிடும். இதனை போஸ்ட் இன்ஃப்லமேட்டரி ஹைப்பர்பிக்மன்டேசன் என்று அழைக்கப்படுகிறது.

#9

#9

கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோக்ஸ்டிரோன் அளவு சற்றே கூடுதலாக இருக்கும். இந்த இரண்டு ஹார்மோன்களுமே சருமத்தில் திட்டுக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

அதே போல மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் இப்படியான சரும பாதிப்புகள் ஏற்படும். கர்பத்தடை மாத்திரை அதிகளவு பயன்படுத்தும் பெண்களுக்கு இது அதிகமாக ஏற்படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி