அழகு குறிப்பு

சின்ன உதட்டை கொஞ்சம் எடுப்பா பெருசா காட்டணுமா?… லவங்கப்பட்டை தேய்ங்க…

லவங்கப் பட்டை எண்ணெய் மற்றும் வாசிலின்

லவங்கப் பட்டை, உதடுகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் ஊக்குவிக்கப்பட்டு உதடுகள் இயற்கையாக பெரிதாகின்றன.

தேவையான பொருட்கள்

 • வாசலின் சிறிதளவு
 • லவங்கப் பட்டை எண்ணெய் 3 துளிகள்

செய்முறை:

ஒரு சுத்தமான கிண்ணத்தில் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு சிட்டிகை சேர்க்கவும்.

அதே கிண்ணத்தில் 2 அல்லது 3 துளி லவங்க பட்டை எண்ணெய்யை சேர்க்கவும்.

இந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டில் தடவவும்.

சிறந்த தீர்வுக்கு சிறிது நேரம் இந்த கலவை உங்கள் உதட்டில் இருக்கட்டும்.

நீங்கள் பயன்படுத்தும் லிப் க்ளாசில் ஒரு துளி லவங்க பட்டை எண்ணெய்யை சேர்த்தும் பயன்படுத்தலாம். மேலே கூறிய முயற்சி பலனளிக்கும் வரை தினமும் வெளியில் செல்வதற்கு முன் இந்த முறையை முயற்சிக்கலாம்.

லவங்க பட்டை எண்ணெய்யை மிகவும் உயர்ந்த தரத்தைக் கொண்டது. தரம் குறைந்த எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம். உதடுகள் சருமத்தில் மென்மையான பாகம் என்பதால், எந்த ஒரு ஒப்பனை பொருள் அல்லது பாதுகாப்புப் பொருள் பயன்படுத்துவதற்கு முன், அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை அறிந்து பின் செயல்படுத்தவும்.

லவங்கப்பட்டை தூள்

லவங்கப்பட்டை தூள்

லவங்கப் பட்டை தூள் மற்றும் வாசலின் சேர்த்து உங்கள் உதடுகளை பெரிதாக்கலாம்.

இதுவும் லவங்க எண்ணெய் போன்ற விளைவைத் தரும். உங்களுக்கு எண்ணெய் அல்லது தூள், இவற்றில் எளிதாகக் கிடைக்கும் பொருளை நீங்கள் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

 • லவங்கப்பட்டை தூள் சிறிதளவு
 • லிப் க்ளாஸ் அல்லது வாசலின்

செய்முறை

ஒரு லவங்கப் பட்டையை எடுத்து நொறுக்கிக் கொள்ளவும்.

உதட்டில் லிப் க்ளாஸ் அல்லது வாசலின் தடவிக் கொள்ளவும்.

பிறகு உதட்டில் லவங்கப் பட்டை தூளை ஒரு பஞ்சால் தடவவும்.

அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உங்கள் உதட்டில் இந்த தூள் அப்படியே இருக்கட்டும்.

பிறகு சுத்தமான நீரால் உதட்டை கழுவவும்.

ஜார் மூலம் உதட்டை பெரிதாக்கலாம்

ஜார் மூலம் உதட்டை பெரிதாக்கலாம்

உங்கள் உதடுகள் கவர்ச்சியாக பெரிதாக இருக்க வீட்டில் இருக்கும் ஜார் அல்லது கப்பை பயன்படுத்தலாம். இதனை முயற்சிக்க பெரிய அளவு பொறுமை தேவை.

தேவையான பொருட்கள்

 • ஒரு சிறிய வாய் உள்ள ஜார் அல்லது கப் அல்லது மூடி`

செய்முறை

உங்கள் உதட்டில் பொருந்தும் அளவிற்கு ஒரு ஜாடி அல்லது கப்பை தேர்வு செய்யவும்.

இதனை உங்கள் உதட்டிற்கு கொண்டு செல்லும் முன், உதட்டில் சிறிதளவு லிப் க்ளாஸ் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி தடவவும்.

இந்த ஜாரின் வாய் பகுதியில் , உங்கள் உதடுகளை வைத்து உங்களால் முடிந்தவரை உறிஞ்சவும்.

இதன் முடிவு உங்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

உப்பு கலவை

உப்பு கலவை

இந்த தீர்வை நீங்கள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் முயற்சித்தால் இயற்கையாக உங்கள் உதடுகள் பெரிதாக மாறும் என்பது உண்மை. இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • ஒரு ஸ்பூன் உப்பு
 • ஒரு ஸ்பூன் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி
 • பீட்ரூட் சாறு
 • லிப்ஸ்டிக் பிரஷ்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டையை இந்த கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் வாசலின் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை உங்கள் விரலால் உதட்டில் தடவவும்.

லிப்ஸ்டிக் போல் உதடு முழுவதையும் மறைத்து தடவவும்.

பத்து நிமிடம் கழித்து இந்த கலவையை உங்கள் உதட்டில் இருந்து துடைத்து எடுக்கவும்.

உதட்டில் எதாவது ஒரு எரிச்சல் ஏற்படுவதை உணர்ந்தால், 5 நிமிடத்தில் இதனைத் துடைத்து விடவும்.

பிறகு பீட்ரூட் சாற்றில் லிப்ஸ்டிக் பிரஷை நனைத்து , உங்கள் உதட்டில் சமமாக எல்லா இடத்திலும் தடவவும்.

மறுநாள், குளித்து முடித்தவுடன் உதட்டில் சிறிதளவு வாசலின் தடவி எப்போதும் போல் உங்கள் வேலையை கவனிக்கவும்.

ஒரு மாதம் வரை இந்த முறையை பின்பற்றவும். இதனால் சிறந்த விளைவுகளை நிச்சயம் உணரலாம்.

எசன்ஷியல் ஆயில்

எசன்ஷியல் ஆயில்

எசன்ஷியல் ஆயில் கொண்டு உங்கள் மிகச் சிறிய உதட்டையும் பெரிதாக மாற்றலாம். அதிக மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு முறையாக இந்த எண்ணெய் தீர்வு அமைத்துள்ளது.

இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • வாசலின் சிறிதளவு
 • மென்தால் 5 துளிகள்
 • விண்டர்க்ரீன் எண்ணெய் 5 துளிகள்
 • லவங்கப்பட்டை எண்ணெய் 5 துளிகள்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை போடவும்.

இதில் 5 துளிகள் மென்தால் சேர்க்கவும்.

இதனுடன் 5 துளிகள் விண்டர்க்ரீன் எண்ணெய்யை சேர்க்கவும். இது ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் தூண்டல் உணர்வைத் தரும் ஒரு எண்ணெய்.

இந்த கலவையில் 5 துளிகள் லவங்கப்பட்டை எண்ணெய்யை சேர்க்கவும்.

இந்த முழுக் கலவையை நன்றாகக் கலந்து விரலால் உங்கள் உதட்டில் தடவவும்.

பிறகு சிறிது நேரம் உங்கள் உதட்டில் இந்த கலவை தங்கட்டும்.

உடனடியாக உங்கள் உதடுகள் மிகவும் மென்மையாகவும் பெரிதாகவும் மாற்றம் பெறும். அதிகரித்த வீக்கம் ஏற்பட்டால், இதன் பயன்பாட்டை தவிர்க்கவும்.

மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி சிறிய உதடுகள் உள்ளவர்கள் அழகிய கவர்ச்சியான பெரிய உதடுகளை எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் பெறலாம். இதனை முயற்சி செய்து, உங்கள் கருத்தை எங்களுக்கு எழுதவும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி