இலங்கை

சிறுமி கடத்தல் விவகாரம்: இருவர் கைது

தெனியாய, நிவ்காமினி பகுதியில் 10 வயதுடைய பாடசாலை சிறுமியை கடத்திய சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை இறக்குவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கடத்தலுக்காக பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நிவ்காமினி பகுதியைச் சேர்ந்த குமார் நிள்மினி என்ற சிறுமியே நேற்று மாலை கடத்தப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வீடொன்றின்றினை பெற்றுத்தறுமாறு சிறுமியின் தாத்தாவிடம் சந்தேகநபர் கேட்டுள்ளார். சிறுமியின் தாத்தாவும் தோட்ட அதிகாரியிடம் பேசி வீட்டை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரிடம் நன் மதிப்பை சந்தேகநபர் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் சம்பவத்தினத்தன்று வீட்டிலிருந்த சிறுமியின் பாட்டியிடம் சிறுமியை கடைக்கு கூட்டிச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் சென்ற சிறுமியை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி தெனியாய நகரத்திற்கு சென்று அங்கிருந்து பிரிதொரு முச்சக்கர வண்டியில் சிறுமியை ஏற்றி இறக்குவானை நகர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடம்  சிறுமியை  வீட்டில் நிறுத்திவிட்டு வந்து முச்சக்கர வண்டிக்கு காசு தருவதாக கூறியுள்ளார்.

இதனால் சாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டு இவ்விடயம் தொடர்பாக பிரதேசவாசிகளிடம் தெரிவித்ததை அடுத்து சந்தேகநபரை பிடித்து இறக்குவானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இறக்குவானை பொலிஸார் சிறுமியை மீட்டு குடும்பத்தினரிடம் சேர்த்ததுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தெனியாய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்தப்படவுள்ள நிலையில் சந்தேகநபரை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி