விளையாட்டு

சிவில் பாதுகாப்பு படையணி சம்பியனானது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில், அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு படையணி சம்பியனானது. தென்கிழக்கு பல்கலைக்கழக அணிக்கும், அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு படையணிக்கும் இடையிலான கரப்பந்தாட்ட போட்டி, மின்னொளியில் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது, மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 3-2 என்ற செட் கணக்கில், சிவில் பாதுகாப்பு அணி வெற்றிபெற்றது. பல்கலைக்கழக உடற்கல்வி துறை பதில் பணிப்பாள ஐஎம் கடாபி தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில், பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக இப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டு சபையின் தலைவரும் அரபுமொழிகள் கற்கை நெறி பீடாதிபதியுமான எஸ்.எம். மஸாஹிமும் கலந்து கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி