சமையல்

சீசுவான் சில்லி பேபி கார்ன் செய்வது எப்படி…!

தேவையான பொருட்கள்


 


பேபி கார்ன் – 1/4 கப்


குடைமிளகாய் – 1/4 கப்


பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)


பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


இஞ்சி – 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)


சோயா சாஸ் – 1 டீஸ்பூன்


சீசுவான் சாஸ் – 1 டீஸ்பூன்


தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்


மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்


தண்ணீர் – தேவையான அளவு


எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


ஊற வைக்க:


 


சோள மாவு – 1 டேபிள்


ஸ்பூன் மைதா – 1 டீஸ்பூன்


மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


தண்ணீர் – தேவையான அளவு


 


சீசுவான் சாஸ் செய்ய:


 


வரமிளகாய் – 30


பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)


இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்


வினிகர் – 1 டீஸ்பூன்


மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்


தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்


எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


 


செய்முறை:


 


சாஸ் செய்யும் முறை:


 


முதலில் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மிளகாயை தனியாக மிக்ஸியில் போட்டு, சிறிது அந்த நீரை ஊற்றி பேஸ்ட் செய்து  கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அரைத்து  வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.


 


எப்போதும் மிளகாய் பேஸ்ட்டில் இருந்து எண்ணெய் பிரிகிறதோ, அப்போது சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம்  குறைவான தீயில் நன்கு வேக வைத்து இறக்கி, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.


 


பேபி கார்ன் செய்யும் முறை:


 


முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி, ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும். பின்  அதில் பேபிகார்ன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பேபி கார்ன்  துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


 


பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய்,  குடைமிளகாய் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும்  தேவையான அளவு உப்பு சேர்த்து, மீதமுள்ள சோள மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


 


பின், அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்ன்துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சீசுவான் சில்லி பேபி கார்ன் தயார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி