கிசு கிசு

சூர்யா படத்தில் மோகன்லால்.. சூர்யாவின் மலையாள பாசம் இதற்குத்தானா?

மலையாள திரையுலக கொண்டாட்டத்தில் சூர்யா வைரல் பேட்டி – வீடியோ

சென்னை : ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

Mohanlal to act with Suriya -suriya makes malyalam market strong

இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ‘ஜில்லா’ படத்திற்கு பிறகு தமிழில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் மோகன்லால். அவர் தவிர, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அல்லு சிரிஷும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் அல்லு அர்ஜூனின் தம்பி.

சூர்யாவிற்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே, நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைக் கவர்ந்தார் சூர்யா.

சமீபத்தில் நடைபெற்ற மலையாள நட்சத்திர கலைவிழாவிலும் கலந்துகொண்டார். மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்ச ரூபாய் நன்கொடையும் அளித்தார். சூர்யாவுக்கு மலையாளத்தில் ரசிகர்கள் அடித்தளமும் இருக்கிறது.

இப்போது, மோகன்லால் உடன் நடிப்பதன் மூலம் இன்னும் வலுவாக தனது மார்க்கெட்டை கேரளாவில் நிறுவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு ரசிகர்களையும் அதிகமாக ஈர்க்க முயற்சித்து வருகிறார் சூர்யா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி